Wednesday, June 30, 2010

10.தென்னமர தோப்புலதான் அய்யா

தென்னமர தோப்புலதான் அய்யா
ஒன்ன நான் பாத்துருந்தேன்

பாதயோரம் நடக்கறச்சே நீ
காதோரம் கிசுகிசுத்தே

பக்கமா நீ நடந்தே நான்
வெக்கத்துல ஒதுங்கிகிட்டேன்

ஒன்ன கண்ட நா மொதலா நான்
துன்னுஞ்சோறு ருசிக்கலையே

கண்ணாடி பாத்தாலும் நான்
காணலையே என் மொகம்தான்

கண்ணுத்து பாத்தாலே நான்
கண்டேனே ஒன்மொகம் தான்

ராவுபகல் தெரியலையே என்
ரெண்டுகாலும் தளந்து போச்சே

நெருப்பா கொதிக்குறதே என்
ரெண்டுகண்ணும் சொருகிடுச்சே

மொத்தமா தாங்கலையே நான்
சத்தம் போட்டா தப்பில்லையே

இதென்ன நோவு அய்யோ அம்மா
என்ன ரொம்ப வாட்டுதய்யோ

ஊர்கண்ணு படடுடுச்சோ என்னை
பேக்காத்து அடிச்சுடுச்சோ

மனசுதான் துடிக்குதய்யா இங்க
மருந்தா நீதான் வாருமய்யா

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

9.நட்பு



நட்பு என்பது ஓர் மலராகும்
சிரிப்பு அதன் பல இதழ்களாகும்

நட்பு என்பது மரமாகும்
தளரும் மனதிற்கு தணல் ஏகும்

நட்பு என்பது உப்பாகும்
உணர்வாம் உணவின் ஆதாரமாகும்

நட்பு என்பது தண்ணீராகும்
வறளும் மனதின் தாகம் தீர்க்கும்

நட்பு என்பது அருமருந்தாகும்
புண்பட்ட மனதினை ஆற்றுவிக்கும்

நட்பு என்பது ஜன்னலாகும்
தேங்கும் மனதிற்கு காற்று நல்கும்

நட்பு என்பது ஊன்றுகோலாகும்
தடுமாறும் மனதினை நடக்க வைக்கும்

நட்பு என்பது விளக்காகும்
இருளும் மனதில் ஒளி வீசும்

நட்பு என்பது சங்கீதமாகும்
மனதாம் வீணையின் கம்பி மீட்டும்

நட்பு என்பது தாய்மடி ஆகும்
அயரும் மனதினை தாலாட்டும்

நட்பு என்பது தந்தையுமாகும்
அவசரகாலத்து அறிவுரை நல்கும்

நட்பு என்பது எல்லாமாகும்
மனதின் இளமைக்கு அமுதமாகும்
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

36.പാഹി കൃഷ്ണ ജയ



പാഹി കൃഷ്ണ ജയ ബാലഗോപാല ജയ
ശരണം ശര്വേശ ചക്രധാരി ജയ
സരസിജനാഭ മുനിജനപ്രിയ ജയ
ശങ്കരിസോദര കൃഷ്ണ ഹരേ ജയ

തുളസിദളപ്രിയ മുകുന്ദ ഹരേ ജയ
തുളസിദാസപ്രിയ നന്ദകുമാര ജയ
അനന്തശയന ആനന്ദരൂപ ജയ
ശ്യാമസുന്ദര കൃഷ്ണ ഹരേ ജയ

രുഗ്മിണിവല്ലഭ ദ്വാരകാപതെ ജയ
ഗോപകുമാര കുചേലമിത്ര ജയ
ദേവകിനന്ദന യശോദബാല ജയ
പിഞ്ചധാരി ജയ കൃഷ്ണ ഹരേ ജയ

വനമാലിധര വാമനരൂപ ജയ
പീതാംബര ജയ പ്രരണവസ്വരൂപ ജയ
സാഷ്ടാംഗപ്രണാമം സജ്ജനമിത്ര ജയ
ദശരൂപ ജയ കൃഷ്ണ ഹരേ ജയ

മങ്ങളരൂപ മാധവ ജയ ജയ
മധുസൂദന ജയ മദനഗോപാല ജയ
ബലരാമസോദര ഗിരിധര ജയ ജയ
പാര്തസാരതെ കൃഷ്ണ ഹരേ ജയ

രാധമനോഹര മുരളിധര ജയ
ഗീദാനായക വേദസ്വരൂപ ജയ
ഉടുപികൃഷ്ണ ജയ സൌന്ദര്യരൂപ ജയ
ഗുരുവായുര്‍പുരേശ കൃഷ്ണ ഹരേ ജയ

സര്വമംഗളം ദേഹി കൃഷ്ണ ജയ
അമ്പലപുഴവാസ കേശവ ജയ ജയ
ദാമോധര ജയ ശ്രീധര ജയ ജയ
ദേഹി ദര്‍ശനം കൃഷ്ണ ഹരേ ജയ

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Sunday, June 27, 2010

35.அகாரரூபிணி

அகாரரூபிணி ஆடிவாராய் அம்மா
அகிலம் காக்க இங்கு ஓடிவாராய்

ஆடும் நடேசனுடன் இணைந்து வாராய் -நீ
ஆனைமுகன் தாளமிட பாடி வாராய்

இகபர சுகம் நல்கும் இன்பமே நீ
இடக்கையில் சூலமேந்தி ஆடி வாராய்

ஈசனுடன் இடம் இணைந்த ஈஸ்வரியே -நீ
பாசமிகு வேலனுடன் பக்கல் வாராய்

உலகாளும் உமையவளே சுந்தரியே அம்மா
உலகளந்தோன் சோதரியே ஆடி வாராய்

ஊக்கமுடன் வாத்தியங்கள் முழங்கிடவே -நீ
ஊர்மக்கள் புடைசூழ தேரில் வாராய்

எங்கும் நிறை மறைரூபிணியே -நீ
பாங்காய் பதம் எடுத்து ஆடி வாராய்

ஏகாம்பரன்தேவி ஏந்திழையே என்னில்
மோகங்கள் களைந்திட தேடி வாராய்

ஐங்கரன் அன்னையே ஆதிசக்தி நீ
பூங்கரத்தில் கரும்பேந்தி ஆடி வாராய்

ஓட்டும் பாசவலை அறுத்து என்னை உன்
பட்டுக்கரம் தொட்டு காக்க வாராய்

ஓங்கார ரூபிணி ரீங்காரியே எங்கள்
அகங்காரம் களைந்திட ஆடி வாராய்

ஔவை தமிழ்ப்பாட்டில் மகிழ் அன்னையே தேவி
கௌரி கௌமாரி பாடி வாராய்

அம்மெனும் எழுத்தின் ஆதாரமே அம்மா
இம்மையின் வெம்மையை நீக்க வாராய்

ஆயுத எழுத்தில் மிளிர் அந்தரியே அம்மா
சேய் எனைகாத்திடவே தேடி வாராய்

காதணியை முழுமதி ஆக்கிய அபிராமியே அம்மா
மீதமற முன்வினைகள் தீர்க்க வாராய்

மதுரை வாழ் மாதரசே மீனாட்சியே நீ
மதுரமூறும் தமிழ்கீதம் கேட்க வாராய்

நாதலய நட னமதில் லயிப்பவளே அம்மா
பாதசரம் இசை எழுப்ப அசைந்து வாராய் (அகாரரூபிணி )
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Saturday, June 26, 2010

34.ജഗത്‌ രക്ഷകാ കൃഷ്ണാ


ஜகத்ரக்ஷகா ...... ஜகன்மோகனா .....
ப்ரணாமம் சர்வேசா க்ருஷ்ணா....

ஜகத்ரக்ஷகா க்ருஷ்ணா ஜகன்மோகனா மய்யா
பக்தவத்சலா ச்யாமா ப்ரபோஹரே 
பாலகோபாலா க்ருஷ்ணா 
ஜய ஜய கிருஷ்ணா ஹரஹர க்ருஷ்ணா 
பாஞ்சாலி சோதர பவபய நாசக 

மேகஸ்யாம வர்ணா கிருஷ்ணா மதுமுரளி கானலோல
கிரிதர கோவிந்தா ப்ரபோஹரே
மதுராபதே க்ருஷ்ணா
ஜய ஜய கிருஷ்ணா ஹரஹர க்ருஷ்ணா 
கடகோல்தரணா கோகுலபாலா 

ப்ருந்தாவனவாசா க்ருஷ்ணா நந்தகுமாரா முகுந்தா 
நவநீதப்ரிய நந்தனா ப்ரபோஹரே 
நரஹரி தேவா க்ருஷ்ணா 
ஜய ஜய கிருஷ்ணா ஹரஹர க்ருஷ்ணா 
கம்சமர்தனா காளீய நர்த்தனா 

குருவாயூர் புரேச க்ருஷ்ணா குரூரம்ம பாலகோபால 
குவலயதள நேத்ரா ப்ரபோஹரே 
குசேலமித்ரா க்ருஷ்ணா 
ஜய ஜய கிருஷ்ணா ஹரஹர க்ருஷ்ணா 
பூந்தான மித்ரா புரந்தர பூஜிதா 

ஸ்ரீரங்கபுரேசா க்ருஷ்ணா ஸ்ரீனிவாசா கோதைநாதா 
ஸ்ரீவைகுண்ட  விஷ்ணோ ப்ரபோஹரே 
ஸ்ரீவத்சா க்ருஷ்ணா 
ஜய ஜய கிருஷ்ணா ஹரஹர க்ருஷ்ணா
பார்த்தசாரதே பாண்டவமித்ரா 

அம்பலப்புழ வாசா க்ருஷ்ணா ஆஸ்ருதவத்சலா முராரே 
ராதாஹ்ருதய சோரா ப்ரபோஹரே 
மாதவா ப்ரணாமம் க்ருஷ்ணா 
ஜய ஜய கிருஷ்ணா ஹரஹர க்ருஷ்ணா
சங்கடநாசக சந்தான கோபாலா         (ஜகத்)



ജഗത്‌ രക്ഷകാ... ജഗന്‍മോഹനാ...
പ്രണാമം സര്‍വ്വേശാ കൃഷ്ണാ...

ജഗത്‌ രക്ഷകാ കൃഷ്ണാ
ജഗന്‍മോഹനാ മയ്യാ
ഭക്ത വല്‍സലാ ശ്യാമാ... പ്രഭോ ഹരേ!
ബാലഗോപാലാ കൃഷ്ണാ

ജയ ജയ കൃഷ്ണാ ഹരഹര കൃഷ്ണാ
പാഞ്ചാലി സോദരാ ഭവ ഭായ നാശകാ

മേഘശ്യാമ വര്‍ണ്ണാ കൃഷ്ണാ
മധുമുരളി ഗാന ലോലാ
ഗിരിധര ഗോവിന്ദാ... പ്രഭോ ഹരേ!
മധുരാപതേ കൃഷ്ണാ

ജയ ജയ കൃഷ്ണാ ഹരഹര കൃഷ്ണാ
കടകോല്‍ ധരണാ ഗോകുല ബാലാ

വൃന്ദാവന വാസാ കൃഷ്ണാ
നന്ദകുമാരാ മുകുന്ദാ
നവനീതപ്രിയ നന്ദനാ... പ്രഭോ ഹരേ!
നരഹരി ദേവാ കൃഷ്ണാ

ജയ ജയ കൃഷ്ണാ ഹരഹര കൃഷ്ണാ
കംസ മര്‍ദ്ദനാ കാളീയ നര്‍ത്തനാ

ഗുരുവായൂര്‍ പുരേശാ കൃഷ്ണാ
കുരൂരമമ ബാലഗോപാലാ
കുവലയദള നേത്രാ... പ്രഭോ ഹരേ!
കുചേല മിത്രാ കൃഷ്ണാ

ജയ ജയ കൃഷ്ണാ ഹരഹര കൃഷ്ണാ
പൂന്ദാന മിത്രാ പുരന്ദര പൂജിതാ

ശ്രീരംഗപുരേശാ കൃഷ്ണാ
ശ്രീനിവാസാ കോതൈ നാഥാ
ശ്രീവൈകുണ്ട വിഷ്ണോ... പ്രഭോ ഹരേ!
ശ്രീവത്സാ കൃഷ്ണാ

ജയ ജയ കൃഷ്ണാ ഹരഹര കൃഷ്ണാ
പാര്‍ത്ഥസരാതെ പാണ്ഡവ മിത്രാ

അമ്പലപ്പുഴ വാസാ കൃഷ്ണാ
ആസൃത വത്സലാ മുരാരേ
രാധാ ഹൃദയ ചോരാ... പ്രഭോ ഹരേ!
മാധവാ പ്രണാമം കൃഷ്ണാ

ജയ ജയ കൃഷ്ണാ ഹരഹര കൃഷ്ണാ
സങ്കട നാശകാ സന്താനഗോപാലാ
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

33.கண்கட்டுவித்தை

கண்கட்டு வித்தை ஏனடா என் கண்ணா
உ ன் கமலக்கண் திறவாய் கண்ணா .....
குறைகள் ஏராளம் எனக்கிங்கு அனைத்தும் அங்கு
மறை போற்றும் கண்ணா மனநிறைவோடே களைந்திடுவாய்
கள்ளநோட்டம் வேண்டா கண்ணா
என் உள்ள்ம் நிறை கார்வண்ணா குருவாயூர் மணிவண்ணா
பீலி சூடி வா முன்னால் துளசிமாலையோடே கண்ணா
மரகதமே........ மாதவமே ............
ஆலிலையில் பள்ளிகொண்ட கண்ணா -அலை
கடலில் துயில் அனந்த சயனா -மண்ணை
உண்ட பவளவாய் கண்ணா -கட்
டுண்டு உரலோடிழை பாலா
குழலூதி என்னில் களியாடும் கண்ணா
கோகுலப்பெண்டிர் போற்றும் கோபகுமாரா நந்தனா
யாதவதிலகா கண்ணா ......(கண்கட்டு )
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

32.ககார ரூபிணி

ககார ரூபிணி கற்பகவல்லி நீ
கதம்பவனம் வாழ் கல்யாணி அருள்புரி
கைகால்ய தாயினி கைலாசவாசினி
வையகம் போற்றும் மங்கள ரூபிணி
மங்கொம்பில் அருளிடும் வனதுர்க்கே பகவதி
செங்கமலக்கண்ணி சிவனேஸ்வரி கெளரி (ககார)

ஒங்காரரூபிணி ஐங்கரன் அன்னை நீ
வேங்கடன் சோதரி வேப்பிலைக்காரி நீ
ஓங்காரரூபிணி ஐங்கரன அன்னை நீ
வேங்கடன் சோதரி வேப்பிலைக்காரி என்
அகங்காரம் களைந்திட அருளொளி தந்திட
திகம்பரன் நாயகி திறந்திடு கண்ணை நீ (ககார)

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

31.பாராமுகம் ஏனம்மா


பாராமுகம் ஏனம்மா அம்மா - உன்
பதம் தேடி வந்தோம் அம்மா
எங்களிடம் உள்ள குறை ஏராளம் தான் அம்மா
பொங்கிவரும் உன் கருணை தாயன்பின்
வடிவம் அம்மா
நெஞ்சே நீ மறவாதே..................
தஞ்சமென அன்னைதனை கொண்டிடுவாய்
நிறைவோடே
முக்கண்ணன் நாயகியாம் மஹாமாயையே
மனமுருகி ..............அழைப்பாயே ..
ஆதி அந்தமும் நீயே அனைத்து உயிர்களும் நீயே
மகிஷமர்தினி நீயே அந்த மாயன் சோதரி நீயே
மலைமகளும் நீயே மறைபோற்றும் மாதே
மாதவப்பயனும் நீயே மங்களம் அருளவாய் நீயே
மங்கொம்பு வாணிடும் தாயே ........(பாராமுகம்)

அசுரகுலம் அழிந்திடவே எழுந்ததுன் திரிசூலம்
ஒன்பது ராத்திரியும் ஒளிர்ந்ததுன் அவதாரம்
வட்டகவாளுடுடையவளே ......
வனதுர்க்கே வரமருள்வாய் மக்கள்க்கிங்கே ...
குணவதியே குலம்காக்கும் கற்பகமே ..
கணநாதன் ............. அன்னையே ..
திரிபுரசுந்தரி நீயே திருமூர்த்தி ஜனனியும் நீயே
அரனின் நாயகி நீயே இந்த அகிலமசைவதுன்னாலே
ஒளிர் சூர்யன் நீயே குளிர் நிலவும் நீயே
அகம்குளிர் இசையும் நீயே கண்குளிர் பரதம் நீயே
அருளிட வருவாய் தாயே ............(பாராமுகம்)
All rights reserved for the poem. Leela Narayanaswamy©