Friday, July 29, 2011

44. மாறாதபுன்னகையை

மாறாத புன்னகையை பூத்தருளும் தாயே
மலர் போல சிரிக்கின்ற மனம் அருள்வாய் நீயே
பேதமின்றி பேரன்பு பொழிகின்ற தாயே
வேதநெறி கூறும் அன்பு வழி காட்டு நீயே

மடமையும் அச்சமும் போக்கிடுவாய் தாயே
கடமையும் நேர்மையும் சேர்த்திடுவாய் நீயே
போதாதென்ற மனம் மாற்றிடுவாய் தாயே -நற்
பாதையை பகுத்தறியும் அறிவினைத்தா நீயே

ஏதிலார் நிறை அறியும் நற்குணம் தா தாயே
தீதிலா சொற்கூறும் நாவினைத்தா நீயே
முதியோர் முன் நாவடக்கம் தந்தருள்வாய் தாயே
நீதிவழி நடந்திட மனத்திண்மை தா நீயே

எனதென்ற செருக்கடக்கி காத்திடுவாய் தாயே
உனதடி தொழுது நின்றேன் உய்விப்பாய் நீயே
நாடிவந்தோம் உனையே நலம் அருள்வாய் தாயே
வணங்கினோம் வாழ்வை வளமாக்கு நீயே











All rights reserved for the poem. Leela Narayanaswamy©