Sunday, November 20, 2011

49.அடிமுடி அறியா அருட்பெருஞ்ஜோதியே


kaarthigai Deepam Virutham by Vellore ARS | Online Karaoke


அடிமுடி அறியா அருட்பெருஞ்ஜோதியே
அண்ணாமலை வாழ் அரனே சிவனே
தீப ஒளியாய் நீ திக்கெங்கும் ஒளிப்பிழம்பாய்
திகழ்ந்த நன்னாளாம் கார்த்திகை திருநாளிது

ஒருமையே இனிய இல்லறம் என்றே
உமையொரு பாகனாய் நின்ற பொன்னாளிது
மலைமீது தீபமேற்றி மகேசனை வழிபட்டு
மலைமகள் தொடங்கி வைத்த கார்த்திகை பெருநாளிது

அதிகாலை பரணி தீபம் பொன்மாலை மகாதீபம்
முக்கண்ணன் மலையில் இன்று கார்த்திகை நெய்தீபம்
ஆனைமுகன் ஆறுமுகன் ஐயப்பன் என்றிவரின்
அய்யனே அம்மையப்பா அருளிடுவாய் நீ அப்பா

അടിമുടി അറിയാ അരുള്പെരും ജ്യോതിയേ
അണ്ണാമലൈ വാഴ് അരനെ ശിവനെ
ദീപ ഒളിയായ്‌ തിക്കെങ്കും ഒളിപ്പിഴംപായ്‌
തികഴ്ന്ത നന്നാളാം കാര്‍ത്തികൈ തിരുനാളിത്
ഒരുമൈയെ ഇനിയ ഇല്ലറം എന്ട്രെ
ഉമൈഒരുബാഗനായ് നിന്ട്ര പൊന്നാളിതു
മലൈമീത് ദീപമേട്രി മഹശനൈ വഴിപട്ടു
മലൈമകള്‍ തൊടങ്കി വൈത്ത കാര്‍ത്തികൈ പെരുനാളിത്
അതികാലൈ ഭരണി ദീപം പൊന്മാലൈ മഹാദീപം
മുക്കണ്ണന്‍ മലൈയില്‍ ഇന്ട്രു കാര്‍ത്തികൈ നെയ്ദീപം
ആനൈമുകന്‍ ആറുമുകന്‍ അയ്യപ്പന്‍ എന്ദ്രിവരിന്‍
അയ്യനെ അമ്മൈയപ്പാ അരുളിടുവായ്‌ നീ അപ്പാ
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment