அறுகம்புல் அணிந்தோனே ஆனைமுகனே சரணம்
இமையவன் மகள் மகனே ஈசனின் திருமகனே (அறுகம்புல்)
உந்திய வயிற்றோனே வந்தனம் சந்ததம்
ஊதுகுழல் ஏந்தியோனின் மனமுகந்த மருமகனே
எருக்கம்பூ சூடியோனே ஏகதந்தனே ஐயா
ஐங்கரனே சரணம் ஐயங்கள் களைந்திடுவாய் (அறுகம்புல்)
ஒளிரும் திருமேனியனே ஓங்காரரூபா சரணம்
முப்பழப்பிரியோனே முருகனுக்கு மூத்தோனே
அப்பமொடவல் பொரி மோதகம் ஏற்றிடுவாய்
எதிருமிடர் களைந்திடுவாய் ஏத்தமிட்டு தொழுதோமே (அறுகம்புல்)
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
No comments:
Post a Comment