Thursday, October 6, 2011

48.கலகம் செய் அசுரரை

கலகம்செய் அசுரரை அழித்து இந்த
உலகம் காக்க வந்த உத்தமியே
ஒன்பது நாட்களும் உருமாறி
ஓங்காரி அசுரரை போரில் வென்றாய்

தின்மையை தீர்க்கும் துர்க்கை நீ
திருவும் பொலிவும்  அருள் திருமகள் நீ
ஒப்பிலா அறிவருளும் கலைமகள் நீ
முப்பெருந்தேவி நீ ஆதிசக்தி

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

47.(முத்தேவியர் துதி) ஆங்காரி ஓங்காரி சிங்காரி நீ


1 துர்காதேவி
ஆங்காரி ஓங்காரி சிங்காரி நீ
ஆயுதம் பல ஏந்தும மாகாளி நீ
சிங்கவாகனத்தில் அமர்பவள் நீ
தங்கமேனியளாய் ஜொலிப்பவள் நீ
அதர்மம் அழிக்க வந்த அன்னை நீ
துக்கம் தீர்த்தருல்வாய் துர்கா நீ

2 லட்சுமி
ஆயிரம் இதழ் மலர் தாமரை வாழ்
ஆனந்தரூபிணி நீ மகாலட்சுமி
சர்வ அலங்காரி சத்குணை நீ
சரத்கால சந்த்ரமுகமுடையாய்
அலைமகள் திருமகள் அருள்வாய் நீ
அனைத்து மங்கலங்கள் தருவாய் நீ

3 சரஸ்வதி
பொய்கையில் வெள்ளைத்தாமரை வாழ்
காயத்ரி சாவித்திரி சரஸ்வதி நீ
கச்சபி சுவடி மணிமாலையுமாய்
காட்சி தரும் வாணி பாரதி நீ
அன்னவாகினியே அருள்வாய் நீ
அஞ்ஞானம் அகற்றி காப்பாய் நீ

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

46.கண்ணாஎன் கால்கள் இடறுதடா


கண்ணா என் கால்கள் இடறுதடா
கைபிடித்து வழிநடத்த வருவாயா?
கண்ணா மனம் உலைபோல் கொதிக்குதடா
கண்மலர் திறந்து குளிர்விப்பாயா?

கண்ணா ஆசைக்கடலில் மனம் ஆடுதடா
ஓடமாய் வந்தெனைக் காப்பாயா?
கண்ணா வீண்மோகங்கள் கூடுதடா
கரங்களால் களைந்துதவ வருவாயா?

கண்ணா மனதில் பனிமூடலடா
குழலோசையால் உருக்கி களைவாயா?
கண்ணா எங்கே பிழை செய்தேனடா?
பவளவாய் திறந்து கூறுவாயா?

கண்ணா கனவில் நீ இல்லையடா
காரணம் என்னவென்று சொல்வாயா?
கண்ணா மனம் தாயன்பால் ஏங்குதடா
கண்முன்னில் குழந்தையாய் வருவாயா?

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

45.அசுரனாய் மாறிய வரமுனியை

அசுரனாய் மாறிய வரமுனியை
அழிக்க வந்தவளே ஆதிசக்தி
மூன்று மூர்த்திகளும் ஒன்றிணைந்து
நின்ற வடிவமே பராசக்தி

சக்ரம் சூலம் கமண்டலமும்
சகலதேவ மகாசக்திகளும்
சக்தி மிக்க சிங்க வாகனமும்
சார்த்தி நின்றவளே சந்திரமுகி

ஒன்பது நாட்கள் நீண்ட போரில்
குமாரி த்ரிமூர்த்தி கல்யாணியாய்
ரோகிணி காளிகா சண்டிகையாய்
சாம்பவி துர்கா சுபத்ராவாய்
ஒவ்வொரு வடிவம் கொண்டவளே

அசுரனை அழித்தவன் உடல்மீதே
ஆனந்த தாண்டவம் ஆடிநின்ற
துர்கா தேவி தொழுது நின்றோம்
மங்கள ரூபிணி மகாலட்சுமி
காயத்ரி தேவி நீ காத்தருள்வாய் 


All rights reserved for the poem. Leela Narayanaswamy©

21.புகழ்ச்சியால் மனதில் பூக்கும் களிப்பு



மரத்தில் பூக்கும் பூக்களல்ல இவை
மனதில் பூக்கும் பூக்கள்

புகழ்ச்சியால் மனதில் பூக்கும் களிப்பு
இகழ்ச்சியால் நிகழும் மனதில் வெடிப்பு
மகிழ்ச்சியின் வெளிப்பாடு கலகல சிரிப்பு
நெகிழ்ச்சியில் ஒழுகும் மனதில் பல நினைப்பு

ஏற்றம் வருங்கால் தோன்றும் பூரிப்பு
சீற்றம் வாருங்கால தோன்றும் கடுப்பு
சுற்றம் சூழுங்கால் தோன்றும் பிணைப்பு
குற்றம் காணுங்கால் மனதில் கொதிப்பு

கவலைகள் சேர்த்திடும் மனதில் இடிப்பு
கணநேர உணர்வால் இரட்டிக்கும் துடிப்பு
தொடரும் தோல்வியால் தோன்றும் களைப்பு
தொலைந்தது வாழ்வென மனதில் வெறுப்பு

நாளை நமதென்ற மனிதனின் எதிர்பார்ப்பு
நம்பிக்கையில் பூக்கும் மனதில் சுறுசுறுப்பு
மனிதனின் கையில் இல்லை பிறப்பு இறப்பு
மாறாத வியப்பு இது மாதவன் படைப்பு

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

20.காதல் கடலினிலே மூழ்கி

காதல் கடலினிலே மூழ்கி
கரையேறத் தவிக்கின்றேனே
கடைக்கண் நோக்கினிலே எனக்கோர்
அடைக்கலம் தருவாயோ?

கனவில் வந்து நின்றாய் - மலர்
நயன மொழி பொழிந்தாய்
முத்தமழை பொழிந்தே என்னைப்
பித்தனாய் அடித்து விட்டாய்

முத்துநகையோடும்
தத்து மொழியோடும்
மெத்த மனமிரங்கி என்
சித்தம் தெளிய வைப்பாய்

kaathal kadalinile moozhki
karaiyeRa thudikkendRene- oru
kadakkaNN nokkinile enakkor
adaikkalam tharuvaayo?

kanavil vanthu nindRaay-malar
nayanamozhi mozhinthaay
muththamazhai pozhinthe ennai
piththanaay adiththu vitaay

muththu nakaiyodum
thaththu mozhiyodum
meththa manamirangi en
chiththa theliya vaippaay

All rights reserved for the poem. Leela Narayanaswamy©