மரத்தில் பூக்கும் பூக்களல்ல இவை
மனதில் பூக்கும் பூக்கள்
புகழ்ச்சியால் மனதில் பூக்கும் களிப்பு
இகழ்ச்சியால் நிகழும் மனதில் வெடிப்பு
மகிழ்ச்சியின் வெளிப்பாடு கலகல சிரிப்பு
நெகிழ்ச்சியில் ஒழுகும் மனதில் பல நினைப்பு
ஏற்றம் வருங்கால் தோன்றும் பூரிப்பு
சீற்றம் வாருங்கால தோன்றும் கடுப்பு
சுற்றம் சூழுங்கால் தோன்றும் பிணைப்பு
குற்றம் காணுங்கால் மனதில் கொதிப்பு
கவலைகள் சேர்த்திடும் மனதில் இடிப்பு
கணநேர உணர்வால் இரட்டிக்கும் துடிப்பு
தொடரும் தோல்வியால் தோன்றும் களைப்பு
தொலைந்தது வாழ்வென மனதில் வெறுப்பு
நாளை நமதென்ற மனிதனின் எதிர்பார்ப்பு
நம்பிக்கையில் பூக்கும் மனதில் சுறுசுறுப்பு
மனிதனின் கையில் இல்லை பிறப்பு இறப்பு
மாறாத வியப்பு இது மாதவன் படைப்பு
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
No comments:
Post a Comment