Thursday, October 6, 2011

46.கண்ணாஎன் கால்கள் இடறுதடா


கண்ணா என் கால்கள் இடறுதடா
கைபிடித்து வழிநடத்த வருவாயா?
கண்ணா மனம் உலைபோல் கொதிக்குதடா
கண்மலர் திறந்து குளிர்விப்பாயா?

கண்ணா ஆசைக்கடலில் மனம் ஆடுதடா
ஓடமாய் வந்தெனைக் காப்பாயா?
கண்ணா வீண்மோகங்கள் கூடுதடா
கரங்களால் களைந்துதவ வருவாயா?

கண்ணா மனதில் பனிமூடலடா
குழலோசையால் உருக்கி களைவாயா?
கண்ணா எங்கே பிழை செய்தேனடா?
பவளவாய் திறந்து கூறுவாயா?

கண்ணா கனவில் நீ இல்லையடா
காரணம் என்னவென்று சொல்வாயா?
கண்ணா மனம் தாயன்பால் ஏங்குதடா
கண்முன்னில் குழந்தையாய் வருவாயா?

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment