Thursday, July 30, 2009

2. காற்றின் வாய்ப்பட்ட இலை

காற்றின் வாய்ப்பட்ட இலை
நாற் புறமும் அலைவது போல்,
நோக்கமில்லா மனிதரது
வாழ்க்கையும் அலைந்தழியும்.

புழுவிற்கும் நோக்கமுண்டு,
உழவர்க்கு உதவலுண்டு,
நிழல் தரும் மரங்களுக்கும்
பழம் தரும் எண்ணமுண்டு.

நாய்க்காவல் புரிவதுன்டு,
பாய்ந்து செல்ல பரிகளுன்டு,
பால் தந்து உதவ இங்கே
பசுக்களைப்போல் யாவருன்டு?

மணம் பரப்பி மனந்தன்னை
மலர்விக்கும் மலர்களுண்டு,
கணநேரம் வாழ்ந்திடினும்
பனித்துளியால் பயனுண்டு.

பலர் வாழத் தன்வாழ்வைச்
சிலநேரம் கழித்திருக்கும்,
நல்நோக்கம் உள்ளோர்தம்
இல்லத்தில் இன்பமுண்டு!

In English alphabet:

piRappin payan


kaattrin vaayppatta ilai
naaR puRamum alaivathu pOl,
nOkkamillaa manitharathu
vaazhkkaiyum alainthazhiyum.

puzhuviRkum nOkkamuNdu,
uzhavarkku uthavaluNdu,
nizhal tharum marangkaLukkum
pazham tharum eNNamuNdu.

naaykkaaval purivathundu,
paaynthu sella parikaLundu,
paal thanthu uthava ingkE
pasukkaLaippOl yaavarundu?

maNam parappi mananthannai
malarvikkum malarkaLuNdu,
kaNa nEram vaazhnthidinum
paniththuLiyaal payanuNdu.

palar vaazha thanvaazhvai
chilaneeram kazhiththirukkum,
nalnookkam uLLoortham
illaththil inbamuNdu!

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

This poem was composed in 1973.

Monday, July 27, 2009

2.ஒரே மனதாய்

ஒரே மனதாய் உனை அழைத்தேன்,
உள்ளம் முழுதும் உன்னை நினைத்தேன்... (ஒரே)

தில்லை ஆடும் தேவன் தேவி,
செந்தூர் முருகன் அன்புத் தாய் நீ...
மயிலை வாழும் மாயே தாயே,
மயங்கும் என்னைக் காப்பாய் நீயே. (ஒரே)

உள்ளம் உருகி, ஊனும் உருகி,
கண்ணீர் பெருக்கி, கைகள் கூப்பி,
உன் தாள் பணிந்தேன் உமையே சிவையே,
மண்ணில் உய்ந்தேன் மலையன் சேயே. (ஒரே)

In English alphabet:

ThayE! Unnai NinaiththEn


Orey manathaay unai azhaiththEn,
ULLam muzhuthum unnai ninaiththEn...

Thillai aadum devan devi,
Chenthuur murukan anpuththaay nii...
Mayilai vaazhum maayee thaayE,
Mayangum ennai kaappaay niiyE.

ULLam uruki uunum uruki,
kaNNiir perukki kaikaL kooppi,
Un thaaL paNinthEn umaiyE shivaiyE
MaNNil uyntheen malayan sEyE.
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

This poem was composed in 1973.

Thursday, July 23, 2009

1.வெள்ளை நிறம்

வெள்ளை நிறம் வெறுத்ததென்று
நீல நிறம் தழுகினயோ?
சொல்லிடுவின் மேகங்களே
மெல்ல என் செவியினிலே
நீல நிற கார் மேகமே நீ
நிலம் தொட்டு தழுவிடவே
மழை நீரை தூதனுப்பி அவள்
மனம் அறிய நினைத்தாயோ?
ஊடி நின்ற மண்ணை நீ
நீர் கொண்டு களிப்பித்தாயோ?
உன்னைக் கண் குளிர கண்டிடவெ
மின்னலில் மிளிர்ந்திட்டாயோ?
அதிரும் இடியோசையுடன் நீ
இறங்கி வந்த வேகம் கண்டு
நிலம் அங்கு நடுங்கி கணம்
தலம் நீருக்குள் ஒளிந்ததுவோ?

In English alphabet:

MEkhangal


VeLLai niram veruththathendru
Neela niram thazhukinayO?
Cholliduvin meghangale
Mella en cheviyinile
Neela nira kaar meghame nee
Nilam thottu thazhukidave
Mazhai neerai doothanuppi avaL
Manam ariya ninaiththaayo?
Uudi nindra maNNai nee
Neer kondu kaLippiththayo?
Unnai kaNN kulira kandidave
Minnalil miLirnthittayo?
Athirum idiyosayudan nee
Irangi vantha vegam kaNdu
Nilam angu nadungi kaNam
Thalam neerukkuL oLinthathuvo?

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Wednesday, July 22, 2009

1.ஆனை முகத்தோனே,

A prayer to Lord Vigneshwara to begin with.

ஆனை முகத்தோனே ஆறு முகன் சோதரனே,
அன்னை உமையவளின் அருமை மகனே...
அன்னைக்கு காவலாகி தந்தையிடம் போராடி தன்-
நம்பிக்கை காத்ததனால் தும்பிக்கை பெற்றவனே...


முன் வினை தீர்ப்பவனே முழுமுதற் கடவுளே தன்
தாய் தந்தை தரணி என்றே வலம் வந்துணர்த்தியோனே...
உந்திய வயிற்றோனே உனதடி பணிந்தேனே,
எந்தையும் தாயுமாயென் குறை களைந்தருள் நீயே!

காகமாய் உருவெடுத்தே கமண்டலம் கவிழ்த்தோனே,
ஏக்தந்தனே உன்னை ஏத்தமிட்டு தொழுதோமே...
எருக்கம்பூ அருகம்புல் என்றிவையில் மகிழ்வோனே,
எதிருமிடர் தொலைந்திடவே என்றும் முன்னில் வருவாயே!

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

I have tuned it in Kaanada ragam.

I have been composing poems from my youth. This is one of my later poems (dated 04-June-2005). I would never have known the infinite possibility of weblogging in the internet if it were not for my son Ramesh. He helped me understand this possibility but it took a final shape today. The credit for this goes to my daughter Rekha, and her friend Rahul (who is as good as my second son).