Monday, September 28, 2009

3.ஓம் எனும் ப்ரணவ

ஒம் எனும் ப்ரணவ சொல்லின் உட்பொருளே...
உமையவள் நேசனே எமை ஆளும் நாதனே...
மதுரத்தமிழ் வாழ் மதுரையில் சுந்தரனே...
சதுராடும் கோலம் கொண்ட சிதம்பரநாதனே...
இடையில் புலித்தோலும் ஜடையில் சந்திரனும்...
கடைக்கண்ணில் தண்ணொளியும் படைபயக்கும் நுதல்க்கண்ணும்...
இடக்கையில் உடுக்கையும் வலக்கையில் அபயமும்...
இடையறா புன்சிரி வீசும் இன்முகமும்...
நாளும் என் மனதில் சிற்பமாய் நின்றிடவே...
நாவில் நால்வரின் பாசுரம் ஊறிடவே...
வேண்டினேன் வேறொன்றும் வேண்டிலேன் சிவனே...
வேதமாம் சாமத்தின் நாயக நடராஜனே...

In English alphabet:

Omkaara naadane


Om enum praNava chollin utporuLe...
umayavaL neshane emai aaLum naathane...
mathurathamizh vaazh mathuraiyil sundarane...
chathuraadum kolam konda chithambara naathane...
idayil puliththolum jadayil chandiranum...
kadaikkaNNil thaNNoLiyum padai payakkum muthalkkaNNum...
idakkaiyyil udukkaiyum valakkaiyyil apayamum...
idaiyaRaa punchiri veeshum inmukamum...
naaLum enmanathil chiRppamaay nindridave...
veNdineen veRondRum veNdileen shivane...
vedamaam saamaththin naayaka natarajane...

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Tuesday, September 1, 2009

4.மழலையின் முதல் வார்த்தை

மழலையின் முதல் வார்த்தை அம்மா ஆகும்,
மதுரமூறும் தமிழ்ச்சொல்லும் அதுவே ஆகும்.
பிறக்குமுன்பும் பிறந்த பின்பும் நம்மை பேணும்,
உறக்கும் நம்மை உறங்காது காக்கும் நாளும்.
தாங்காய் தணலாய் பாங்காய் பணி புரியும்,
தாழ்வரையில் என்றுமோர் சாய்வு நாற்காலி ஆகும்.
சேயாக பிறப்பதுன்டு நாம் தாயாக பிறப்பதில்லை,
தாயாகும் யாரும் அம்மா ஆவதுமில்லை.
வானோரும் போற்றும் அம்மா என்ற நிலை,
தானே வராது, இது ஓர் அதிசய உயர்நிலை.
அன்பும் பாசமும் அணைக்கும் கரங்களும்,
புண் ஆற்றும் சொற்களும், புன்சிரி முகமும் - பிறரை
சேயெனக் காணும் பொன்மனப் பக்குவமும்,
தாயாக உருவெடுக்கும் தனித்தமிழ் சொல்லினிலே.

In English alphabet-



manithappiRaviyin manthiram

mazhalaiyin muthal vaarththai ammaa aakum,
mathuramuuRum thamizhchchollum athuvE aakum.
piRakkumunpum piRantha pinpum nammai pENum,
uRakkum nammai uRangkaathu kaakkum naaLum.
thaangkaay thaNalaay paangkaay paNi puriyum,
thaazhvaraiyil enRumoor saayvu naaRkaali aakum.
sEyaaka piRappathundu naam thaayaaka piRappathillai,
thaayaakum yaarum ammaa aavathumillai.
vaanoorum pootRum ammaa enRa nilai,
thaanE varaathu, ithu oor athisaya uyarnilai.
anpum paasamum aNaikkum karangkaLum,
puN aaRRum choRkaLum, punchiri mukamum - piRarai
sEyena kaaNum ponmana pakkuvamum,
thaayaaka uruvedukkum thaniththamizh chollinilE.

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

3. மழலையும் மலர்களும்

மழலையும் மலர்களும் ஒன்றென்பார் சிலர்,
மனதினில் மகிழ்வலை எழுப்புவதாலே.
மழலை பிறக்குது அழுகுரலுடனே,
மலர் இங்கு பூக்குது சிரிமுகத்துடனே.
மலரும் பூக்களுக்கேன் இத்தனை மகிழ்ச்சி,
புலரும் வேளையை புணர்ந்ததினாலோ?
கண் திறக்கும் போதே குழவி ஏன் அழுததோ,
மண்ணில் பின்னிடும் துயரம் அறிந்ததோ?
மழலையின் தலைவிதி பிறந்திடும் முன்பே,
மலர்களின் தலைவிதி மலர்ந்த பின்பே.
மாதரின் முடியிலோ, மண்ணின் மடியிலோ,
மந்திர ஓசையுடன் தெய்வத்திருவடியிலோ?
அறியாவிடினும் சிரிக்கும் பூமுகங்கள்,
சில மணித்துளிகளே வாழும் இம்மலர்கள்.
மாறுபட்ட மணநிற மலர்களுக்கொரே குணம்-
மணம்பரப்பி மனிதரிடை மகிழ்வு தரும் இன்முகம்.
மாறுபட்ட குணங்களிங்கு மனிதர்க்கு மாத்திரம்-
மனம்கறுத்து முகம் சுளிக்கும் மாந்தரிங்கு பலவிதம்.
இன்முகத்துடனே இல்லறம் வளர்த்திட,
இன்னல்களிலும் முகம் மலர்போல் மலர்ந்திட,
மகிழ்ச்சி ஒன்றே அருமருந்தாகும்,
மனதெனும் பேயின் வன்முறை அடக்கும்.
ஆகையால் மனிதா!
இன்றையப்பொழுதினில் சிரித்து வாழ்வாய்,
இனிவரும் காலம் இறைவன் கைகளில்!


In English alphabet:

malarum manithanum


mazhalaiyum malarkaLum onRenpaar chilar,
manathinil makizhvalai ezhuppuvathaalE.
mazhalai piRakkuthu azhukuraludanE,
malar ingku puukkuthu chirimukaththudanE.
malarum puukkaLukkEn iththanai makizhchchi,
pularum vELaiyai puNarnthathinaaloo?
kaN thiRakkum poothE kuzhavi yEn azhuthathoo,
maNNil pinnidum thuyaram aRinthathoo?
manithanin thalaividhi piRanthidum munpE,
malarkaLin thalaividhi malarntha pinpE.
maatharin mudiyiloo, maNNin madiyiloo,
manthira ooshaiyudan theyvaththiruvadiyiloo?
aRiyaavidinum chirikkum puumukangkaL,
chila maNiththuLikaLE vaazhum immalarkaL.
maaRupatta maNaniRa malarkaLukkorE kuNam-
maNamparappi manitharidai makizhvu tharum inmukam.
maaRupatta guNangkaLingku manitharkku maaththiram-
manamkaRuththu mukam chuLikkum maantharingku palavitham.
inmukaththudanE illaRam vaLarththida,
innalkaLilum mukam malarpool malarnthida,
makizhchchi onRE arumarunththaakum,
manathenum pEyin vanmuRai adakkum.
aakaiyaal manithaa!
inRaiyappozhuthinil chiriththu vaazhvaay,
inivarum kaalam iRaivan kaikaLil!
All rights reserved for the poem. Leela Narayanaswamy©