Tuesday, September 1, 2009

3. மழலையும் மலர்களும்

மழலையும் மலர்களும் ஒன்றென்பார் சிலர்,
மனதினில் மகிழ்வலை எழுப்புவதாலே.
மழலை பிறக்குது அழுகுரலுடனே,
மலர் இங்கு பூக்குது சிரிமுகத்துடனே.
மலரும் பூக்களுக்கேன் இத்தனை மகிழ்ச்சி,
புலரும் வேளையை புணர்ந்ததினாலோ?
கண் திறக்கும் போதே குழவி ஏன் அழுததோ,
மண்ணில் பின்னிடும் துயரம் அறிந்ததோ?
மழலையின் தலைவிதி பிறந்திடும் முன்பே,
மலர்களின் தலைவிதி மலர்ந்த பின்பே.
மாதரின் முடியிலோ, மண்ணின் மடியிலோ,
மந்திர ஓசையுடன் தெய்வத்திருவடியிலோ?
அறியாவிடினும் சிரிக்கும் பூமுகங்கள்,
சில மணித்துளிகளே வாழும் இம்மலர்கள்.
மாறுபட்ட மணநிற மலர்களுக்கொரே குணம்-
மணம்பரப்பி மனிதரிடை மகிழ்வு தரும் இன்முகம்.
மாறுபட்ட குணங்களிங்கு மனிதர்க்கு மாத்திரம்-
மனம்கறுத்து முகம் சுளிக்கும் மாந்தரிங்கு பலவிதம்.
இன்முகத்துடனே இல்லறம் வளர்த்திட,
இன்னல்களிலும் முகம் மலர்போல் மலர்ந்திட,
மகிழ்ச்சி ஒன்றே அருமருந்தாகும்,
மனதெனும் பேயின் வன்முறை அடக்கும்.
ஆகையால் மனிதா!
இன்றையப்பொழுதினில் சிரித்து வாழ்வாய்,
இனிவரும் காலம் இறைவன் கைகளில்!


In English alphabet:

malarum manithanum


mazhalaiyum malarkaLum onRenpaar chilar,
manathinil makizhvalai ezhuppuvathaalE.
mazhalai piRakkuthu azhukuraludanE,
malar ingku puukkuthu chirimukaththudanE.
malarum puukkaLukkEn iththanai makizhchchi,
pularum vELaiyai puNarnthathinaaloo?
kaN thiRakkum poothE kuzhavi yEn azhuthathoo,
maNNil pinnidum thuyaram aRinthathoo?
manithanin thalaividhi piRanthidum munpE,
malarkaLin thalaividhi malarntha pinpE.
maatharin mudiyiloo, maNNin madiyiloo,
manthira ooshaiyudan theyvaththiruvadiyiloo?
aRiyaavidinum chirikkum puumukangkaL,
chila maNiththuLikaLE vaazhum immalarkaL.
maaRupatta maNaniRa malarkaLukkorE kuNam-
maNamparappi manitharidai makizhvu tharum inmukam.
maaRupatta guNangkaLingku manitharkku maaththiram-
manamkaRuththu mukam chuLikkum maantharingku palavitham.
inmukaththudanE illaRam vaLarththida,
innalkaLilum mukam malarpool malarnthida,
makizhchchi onRE arumarunththaakum,
manathenum pEyin vanmuRai adakkum.
aakaiyaal manithaa!
inRaiyappozhuthinil chiriththu vaazhvaay,
inivarum kaalam iRaivan kaikaLil!
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

4 comments: