Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts

Wednesday, December 24, 2014

33.மலராய் விரியும்

மலராய் விரியும் மனம்
   கவர்பல வண்ணங்களாய்
அழகாய் சிதறும் கண்
   கவர்வண்ண கனவுகளாய்
ஓ ............. ஆசைப்பூ விரிந்ததிங்கே
ஆனந்தம் கூடுது இங்கே
விவாகப் பட்டணிந்து
   பெண்ணின் கல்யாணம்....


malaraay viriyum manam
    kavarpala vaNNangaLaay
azhagaay chithaRum kaNN
   kavarvaNNa kanavukaLaay
oh.... aasaippoo         virinthathinge
aanantham kooduthu inge
vivaaha pattaNinthu
  peNNin kalyaaNam

for Krishnaraaj for an ad of Chennai silks on 21.12.14
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Sunday, December 14, 2014

32.கல்லாம் என்மனதில்

கல்லாம் என்மனதில் சொல்லாமல் நீ வந்ததேன்
கடலில் அலையென இரண்டறக் கலந்ததேன்
கண்ணிமைப்பொழுதில் கனவாய் மறைந்ததேன்
கனலான என்கண்உன் நிழல் தேடி அலையுதே (கல்லாம்)

நிறையும் என்விழிகள் ஆகும் நீரருவியாய்
நீ இங்கில்லைஎனும் நினைவின் சுழலியால்
பாடாத கவிதையே மறையாத ஓவியமே
காயாத புதுமலரே கண்மணி ஆனவளே
உறவாடி நீ நின்ற காலம் நினைத்தாலே
உயிரின் தாளம் தடமிடறிப் போனதே      (கல்லாம்)

இளநெஞ்சின் கனவிற்கு புதுநிலவானவளே
இதயவீணையின் நாதமாய் நின்றவளே
அறிகிலையோ நீ என் உணர்வின் அலைகள்
அன்றும் இன்றுமென் விழிநீரின் மொழிகள்
ஆவதொன்றுமிலை நீ எனக்கில்லை அறிவேன்
ஆயினும் தேடுகிறேன் தளராத மனமுமாய் (கல்லாம்)
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.

Saturday, December 13, 2014

31.ஓநாய் நாட்டிலே

ஓநாய் நாட்டிலே ஓடியாடுதே
நீதி நேர்மையோ மாயமானதே
குண்டுவெடி கொலை நாளும் பெருகுதே
மொத்தநாடுமே சுடுகாடானதே
தந்தை காமத்தீயில் கருகும் மகளே மனித மிருகங்களே ...........

பள்ளிப்பிள்ளையும் பலியாடாகுதே
கள்ளப்பணம் கல்லும் கற்பழிப்பு கொள்ளை
நித்தம் ஊழல் நாட்டில் நிம்மதி எங்கே ?..........

காப்பகங்களும் அடிமைக்கூடமே
கள் சுமக்கும் பிள்ளை கண்ணில் ஏக்கம் கண்டேன்
வாக்குறுதி எல்லாம் ஒட்டு என்னும் வரையே

நன்மை நாடியே நெஞ்சுருகுதே
வழியும் தேடியே நாடு காக்கவே
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
written for Mr. Unnikrishnan.K.B. under the theme "FRUSTRATION"
according to the already set tune. on 03.05 14

30.அன்றென்னவோ

அன்றென்னவோ பன்னோசையும் கேட்கவே
ஓர் மழலையின் அழுமோசையும் சேரவே
கனவிலும் காணாக் காட்சிகள் அத்தினம் காணவே
இருகண் இமைக்கும் நேரத்தில் நிசப்தம் ஆனதே
எங்கெங்கெயோ தன் தாயினை தேடியே
நின்றோரமாய் கண் ஊற்றென மாறவே
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
written for"Beyond Calton"- a safe earth on Feb 2012
sung by Mr K.B.Unnikrishnan

29.எங்கோ தொலைவிலே

பெண் குரலில்
எங்கோ தொலைவிலே தொடரா நிழலாய் நான்
தேங்கியே விழிமொழியாய் கண்ணீர் பொழியும்
காட்சியில் கலைந்ததம்மா பிரியா விடையும்
ஆண் குரலில்
சந்திரனின் பிரியமுள்ள பூவே நீ இரவினில் மலராதே
ஏதோ கனாவில் அறியாதென் நெஞ்சில்
    கனலுமாய் எரிக்கிறாய் நீறுதேன் பஞ்சணையே (சந்திரனின்)

கடலே வெண்ணலைகளை அனுப்பியே
      உரையாட விழைந்தனை தனியே நீ
யாரோடும் சொல்லாத்த என் மோகங்கள்
      காதோடு கேட்காமல் தானாகவே
எங்கெங்கோ பாய்ந்தங்கு மௌனமாய் ஓடி
      மாய்ந்ததேன் சொல்லேன்       (சந்திரனின்)

நிலவே நின் ஒளியில் அவள் பிம்பம்
       தெரியவே நிழலாய் நானங்கு
ஆராரும் காணாதே நின்னைத் தொடரவே
       அம்முகம் மாயுதே கானல் நீர்போல்
இனி அன்பே மறக்குமோ மெதுவாய் மூளும் என்னனுராகம்
written for Mr. Susanth Sankar according to the tune already set on 23.01 12.


All rights reserved for the poem. Leela Narayanaswamy©
   

28.வானுயர் மரங்களும்

வானுயர் மரங்களும் வடிவில்லா காற்றும்
நாள் தோறும் பரிமாறும் காதல் மொழிகள்
மேகம் கேட்டங்கு நாணித்ததாலோ
அகன்று நிறம் மாறி மறைவிடம் தேடி
மண்ணில் இறங்குதே மின்னலிடி மழையாய்

All rights reserved for the poem. Leela Narayanaswamy©
came in Face Book on 18.01 13 through Mr. Susanth Sankar

27. தூரே தூரே போனாலும்

தூரே தூரே போனாலும்
     தொடரும் உந்தன் நினைவுகளும்
யாரும் யாரும் அறியாதே
     யாழின் இசையாய் இனிமை தரும்
எங்கோ பெய்யும் மழைத்துளிகள்
     பாங்காய் தாளம் கொட்டிவரும்
இங்கே அங்கே என்றிருந்தாலும்
      எங்கும் நிறைந்த காற்றலைபோல்
வானும் நிலவும்போல் இணை பிரியா
       தென்றும் நம்முறவு தொடர்ந்திடுமே

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

26. வசந்தமே உன்

வசந்தமே உன் நினைவுகள் வளருது
வாடும் என் மனதை நாளும் வருடுது
காலம் போனாலும் காதல் மாறுமோ?
காத்திருப்பில் ஒரு சுகமுண்டு தெரியுமோ?

ஆழப்பதிந்த உன் மலர்முகம் மனதை
ஆழ்கடலலை போல் ஆட்டுதம்மா
பாடும் கொடியாக
தொடரும் கதையாக
தேடும் விடையாக
எங்கோ நின்று நீ இன்று   
பாடும் கவியாக என்னை மாற்றிவிட்டாய்
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

25.சிதறி விழும்

சிதறி விழும் பூக்களென சிரிக்கும் மத்தாப்பு
சின்னஞ்சிறு மழலைகளின் முகமலரில் சிரிப்பு
சிங்காரி கங்கையவள் வெந்நீரில் வருகை  தர
எங்கும் எண்ணைக்குளி புத்தாடையுடன் இனிப்பு
தீமையின் இருளகல தீபங்களின் ஆவளி
திருமகள் அருள் பெருக தீபமேற்றி தீபாவளி

நரகனெனும் அசுரனையே வதித்தனின்னாளே
ரகுராமன் வனவாழ்க்கை முடிந்ததின்னாளிலே
மாகாளி சினம் மாறி இந்நாளில் முகம் மலர
வங்கம் ஆற்றினிலே மிதக்கவிடும் தீபங்கள்
இமயம் முதல் குமரி வரை தீபங்களின் ஆவளி
மகிழ்வலை எதிரொலியாய் தீபமேற்றி தீபாவளி
  All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Saturday, October 6, 2012

24.இயற்கை வளம் காப்போம் -வான்நிலம் நெருப்பு




வான்நிலம் நெருப்பு காற்று நீரென்ற ஐந்துமாய்
காக்கிறாள் இயற்கை அன்னை  நன்றி என்றுமே

மரம தரும் மழையால் நன்மையே
மகன் போல காப்போம் நண்பனே

ஆலைகள் உமிழும் அமில வாயுவால் காற்றிலே
ஆவினம் பறவை மக்கள் சுவாசமே தேடுதே

வானில் புரட்சி செய்தால் பூமியே
ஊனமுற்று போகும் உண்மையே

vaannilam neruppu katRu neerendra aynthumaay
kaakiRaaL iyaRkai annai nandRi endRume

maram tharum mazhaiyaal nanmaiye
makanpola kaappom nanpane

aalaikaL umizhum amila vaayuvaal kaatRile
aavinam paRavai makkaL swaasame theduthe

vaanil puratchi cheythaal boomiye
oonamutru pokum uNmaiye

വാന്നിലം നെരുപ്പു കാറ്റു നീരെന്‍ട്ര ഐന്തുമായ്‌
കാകിറാള്‍ ഇയര്‍കൈ അന്നൈ നന്ട്രി  എന്ട്രുമേ

മരം തരും മഴൈയാല്‍ നന്മൈയേ
മകന്‍ പോല കാപ്പോം നണ്‍പനേ

ആലൈകള്‍ ഉമിഴും അമില വായുവാല്‍ കാറ്റിലേ
ആവിനം പറവൈ മക്കള്‍ സ്വാസമേ തേടതേ

വാനില്‍ പുരഷി ചെയ്‌താല്‍ ഭൂമിയേ
ഊനമുട്രു പോകും ഉണ്മൈയേ
(written as per the tune already set)
written according to the tune set. sung byMr.Unnikrishnan.K.B.

All rights reserved for the poem. Leela Narayanaswamy©


Sunday, August 26, 2012

23aമലയാള



 മലയാള ദേശത്ത് മാവേലി വരുന്ന കാലം
 നാടാകെ ആഘോഷം മത്സരം സമ്മാനം

 വീടിന്‍റെ മുറ്റത്ത് പൂക്കളം പുലരിയില്‍
 പാടിക്കളിക്കുന്നു ഊഞ്ഞാലിട്ടൊരുകൂട്ടം

 മാദേവന്‍ വാമനന്‍ എഴുന്തള്ളും നേരം
 തിരുവോണ സദ്യയുമായ്‌ സ്വാഗതം സ്വാഗതം

 തിരുവോണക്കോടിയുമായ്‌ കളിചിരിതൂകി ബാലര്‍
 തിരുനാളില്‍ മിത്രമുമായ്‌ ഓടിക്കളിയായ്

 ഈചിരി എന്നെന്നും മായാതെ കാക്കണേ
 ഈരടിയില്‍ മൂണ്ലോകം അളന്ന നാരായണ
   

23.ஆவணித் திருவோண நன்னாளில் அதிதிக்கு



  ஆவணித் திருவோண நன்னாளில் அதிதிக்கு
  அந்தணச் சிறுவனாய் அவதரித்தவாமனா

  பக்தனாம் மகாபலியை பக்குவப்படுத்திட
  யுக்தியாய் மூன்றடி மண் யாசித்த பாலா  (ஆவணி)

  ஈரடியில் மூவுலகும் அளந்தபின் மகாபலியின்
  திருமுடியில் மூன்றாமடி பதித்த பரந்தாமா
  பக்தனாம் மகாபலியை அன்போடாதரித்து
  பாதாள லோகமதை பரிந்துரைத்த தேவா (ஆவணி)

  அத்தம் முதல் பத்து நாளும் அனைத்து வீட்டு வாசலிலும்
  அழகழகாய் பூக்கோலம் திருநாள் கோலாகலம்
  இனிவரும் காலமும் இதேபோல் இன்பமுற
  இரங்கி அருள்வாய் நீ அலைமகள் தேவா (ஆவணி)


Friday, December 2, 2011

22.ஓசையில்லா

ஓசையில்லா ஏக தாளத்தில்
பாடும் மௌன ராகங்கள்
கண்ணோட்டங்கள் மொழிகளுமாய்
கண்ணீர்த்துளிகள் சுருதியாக (ஓசை)

எங்கோ அலையும் நினைவுகளில்
ஏதோ தேடும் பாவனையாய்
என்றோ இழந்த பழமைகளை
இன்றும் மெல்லும் ஆவினமாய் (ஓசை)

தேங்கி நிற்கும் உணர்வுகளை
பாங்காய் கோர்க்கும் பாவனையாய்
ஊனமுற்ற இந்த உள்ளத்தின்
கானம கேட்பீர் காதோர்த்து (ஓசை)
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Thursday, October 6, 2011

21.புகழ்ச்சியால் மனதில் பூக்கும் களிப்பு



மரத்தில் பூக்கும் பூக்களல்ல இவை
மனதில் பூக்கும் பூக்கள்

புகழ்ச்சியால் மனதில் பூக்கும் களிப்பு
இகழ்ச்சியால் நிகழும் மனதில் வெடிப்பு
மகிழ்ச்சியின் வெளிப்பாடு கலகல சிரிப்பு
நெகிழ்ச்சியில் ஒழுகும் மனதில் பல நினைப்பு

ஏற்றம் வருங்கால் தோன்றும் பூரிப்பு
சீற்றம் வாருங்கால தோன்றும் கடுப்பு
சுற்றம் சூழுங்கால் தோன்றும் பிணைப்பு
குற்றம் காணுங்கால் மனதில் கொதிப்பு

கவலைகள் சேர்த்திடும் மனதில் இடிப்பு
கணநேர உணர்வால் இரட்டிக்கும் துடிப்பு
தொடரும் தோல்வியால் தோன்றும் களைப்பு
தொலைந்தது வாழ்வென மனதில் வெறுப்பு

நாளை நமதென்ற மனிதனின் எதிர்பார்ப்பு
நம்பிக்கையில் பூக்கும் மனதில் சுறுசுறுப்பு
மனிதனின் கையில் இல்லை பிறப்பு இறப்பு
மாறாத வியப்பு இது மாதவன் படைப்பு

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

20.காதல் கடலினிலே மூழ்கி

காதல் கடலினிலே மூழ்கி
கரையேறத் தவிக்கின்றேனே
கடைக்கண் நோக்கினிலே எனக்கோர்
அடைக்கலம் தருவாயோ?

கனவில் வந்து நின்றாய் - மலர்
நயன மொழி பொழிந்தாய்
முத்தமழை பொழிந்தே என்னைப்
பித்தனாய் அடித்து விட்டாய்

முத்துநகையோடும்
தத்து மொழியோடும்
மெத்த மனமிரங்கி என்
சித்தம் தெளிய வைப்பாய்

kaathal kadalinile moozhki
karaiyeRa thudikkendRene- oru
kadakkaNN nokkinile enakkor
adaikkalam tharuvaayo?

kanavil vanthu nindRaay-malar
nayanamozhi mozhinthaay
muththamazhai pozhinthe ennai
piththanaay adiththu vitaay

muththu nakaiyodum
thaththu mozhiyodum
meththa manamirangi en
chiththa theliya vaippaay

All rights reserved for the poem. Leela Narayanaswamy©


Thursday, January 20, 2011

19. ஒரே ஒரு உள்ளம்

ஒரே ஒரு உள்ளம் ஒன்றிற்பரம் உவமைகள்!
உருகுமென் மனமொரு இறகென்பார் சிலர்
உணர்வுகளின் காற்றில் உள்ளம பறந்ததோ?
உணர்வொன்று உதிர்ந்தங்கோர் இறகாய் வீணதோ?

மனம் ஒரு அடங்காப்பேய் என்பார் சிலர்
மாறாதடிக்கும் உணர்வாம் சுழர்காற்றால்
மனம் தன்வயம் இழந்து அலறுவதாலோ?

மனம் ஒரு குரங்கென்று கூறுவார் சிலர்
குணங்களாம் மரங்களில் மாறிமாறித் தாவும் மனம்
குரங்கு போலென்றால் தவறில்லை அன்றோ?

உள்ளம ஒரு மெழுகு எனும் உவமை ஒரு புதுமை
உணர்வின் வெளிப்பாட்டில் ஓயாதடிபட்டு
உருக்குலையும் மனம் ஒரு மெழுகு போலன்றோ?
உணர்வாம் தீச்சூட்டில் உருகி ஒழுகும் மனம்
ஓடும வழியிலேயே உறையுமோ மெழுகுபோல்?

குயவனின் கையில் சீர்படும் மண் போல
குழைந்தும் உறைந்தும் பதப்படும் நம் மனம்
இன்முகம் காட்ட வழிகாட்டியாய் நிற்கும் மனம்
இன்னலும் இன்பமும் சமநிலையில் ஏற்கும் மனம்
சுமைதாங்கி ஆகும் சுடலையில் மறையும் வரை.












All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Tuesday, January 11, 2011

18.ழ எனும் எழுத்து-"பூவணிந்து பொலிவோடு "


தன் ஒரு குழந்தையின் அவலநிலை கண்டு தமிழ் அன்னையின் புலம்பல்

பூவணிந்து பொலிவோடு நிமிர்ந்து நின்றிருந்தாய்
புலவர் போற்றும் சங்ககாலத்தன்று
செல்லக்குழந்தையாய் இருந்த நீ இன்று
செல்லாக்காசாக ஆகிவிட்டாய்
சின்னாபின்னமாய் நிலைகுலைந்தாய் உந்தன்

தனித்தன்மையை நீ இழந்து நின்றாய்
உன்னை ஏன் இன்று பலரும் ஏற்கவில்லை?
உன் சப்தம் யாருக்கும் ஏன் பிரியமில்லை
தமிழனின் நாவுனக்கு காலனாய் வந்ததேன்?
அழித்துனை அருவமாய் ஆக்கி மகிழ்வதேன்?
ஏறும்பூர்ந்து கல்லும் தேயும் என்பார் தமிழனின்
நாவூர்ந்து நீ இன்று தேய்ந்தனையே.
அழகிய நீ இப்போது அழகில் இல்லை
பழத்தில் நின்றும் உன்னை நீக்கிவிட்டார்
வாழையில் நீ இல்லை செய்த பிழை அறியேனே
வழியிலும் நீ இல்லை கதி இன்றி நிற்கின்றாய்
உன் இடத்தில் "ள"வந்தாள் உனைத் தொலைத்த இடம் எங்கே?
அழுகையில் நீ இல்லை அதனால் நான் அழவில்லை
"தழை"ல் நீ இல்லை "தளை"இட்டு வைத்தார்கள்
குழந்தையில் நீ இல்லை குழந்தை நீ எங்கே சொல்
எழுத்தா? எளுத்தா? மொழியா? மொளியா?
எங்கும் உனைத்தேடி நான் மௌனமாய் கரைகின்றேன்
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

17.மனம் திறந்து ஒரு வார்த்தை"இறைவா நான் செய்த பாபம் என்ன?"




உயிரினங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனித்தன்மை வாய்ந்தது.
தன் இயல்பை இழக்க
யாரும் விரும்புவதில்லை.அங்கே

எதிர்ப்புகள் வார்த்தைளால் அல்லது செயல்பாட்டினால்
உடன் உணர்த்தப்படுகின்றன.இது எல்லா உயிர்களுக்கும்
பொதுவானது. இங்குதான்
நான் ஒரு உண்மையை உணர்த்த

விழைகிறேன்.எண்ணங்கள் வடிவம் கொள்வது

எழுத்துக்களால்

எனில் எழுத்துக்களின் தனித்தன்மை காக்கப்பட வேண்டும் அல்லவா?
எழுத்தக்கள் இடம் மாறினால்? அல்லது தவறாக உச்சரிக்கப்பட்டால்?
அது ஒரு கொலைக்குச் சமம் அல்லவா? எழுத்த்க்களின் எழில் அரசி
தமிழில்
வரும் "ழ" என்ற எழுத்து. தனிச்சிறப்பு வாய்ந்த இந்த

எழுத்தைக் கொடுமையாக

கொலை செய்பவர்கள் தமிழர்களே.

"வழி"யை "வளி"என்றும்

"மழை"யை "மளை" என்றும்


"பழ"த்தை"பளம்" என்றும் மிகத்தவறாக உச்சரிப்பவர்கள்
கீழ்த்தட்டில் மட்டுமல்ல மேல்தட்டில் உள்ளவர்களும் தான்.
தொலைக்காட்சிகளிலும் கூட இந்தக்கொலை இயக்குனர்களாலேயே
மிகச்சாதாரணமாக நடக்கிறது. இதனால் மற்ற மொழி பேசும் மக்களிடையே
தமிழில் "ழ" இல்லை என்ற உணர்வு வலுத்திருக்கிறது. இதற்கு உதாரணம்
வெளி மாநிலங்களில் "பழனி "பளனி" என்று எழுதப்பட்டிருப்பதே.
தமிழ்த்தாயின் அவயவங்களை சித்ரவதை செய்வது அத்தாயின் மக்களே.
இக்கொடுமை இந்தத் தாய்க்கு மட்டுமே நடந்து வருகிறது.
"என் அவல நிலையைச் சொல்லி அலற எனக்கு நாவில்லையே"
என்று தமிழ்த்தாய் மௌனக்கண்ணீர் வடிக்கிறாள் இதோ!
இறைவா நான் செய்த பாபம் என்ன?
இந்த அவலநிலை வந்ததென்ன?
என்னை ஊனமாக்கி நிறுத்திவிட்டார்
கண்ணைக் குத்திக் குருடாக்கி விட்டார்
என் மக்களிடம் முறையிட வழியில்லையே!
அவரன்றோ இந்நிலைக்குக் காரணங்கள்
எழுத்துக்கள் ஒரு மொழியின் கண்களன்றோ?
பழுது அடையின் பொருள் அங்கு மாறுமன்றோ?
சிறப்புறுப்பாம் "ழ"என்ற எழுத்தினோடு
சினம் வெறுப்பேதுமுண்டோ? சொல்வீர் ஐயா!










All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Monday, January 10, 2011

16.மாதமாம் மார்கழியில் வாசலில் கோலமிட்டு

மாதமாம் மார்கழியில் வாசலில் கோலமிட்டு
மையத்தில் வைத்திடுவார் சாணம் மேல் பூசணிப்பூ
காத்திருந்த தைமாதம் நாளை என்ற நிலையில் அங்கு
வரிசையுடன் உடன்பிறந்தான் வருவான் போகியன்று
உவகையுடன் உபசரித்து  மங்கையரும்   மகிழ்ந்திடுவர் 
உவலைதீர கூரையிலே பூளை வேப்பிலை கட்டிடுவர்
மாவிலைத்தோரணமும் வாசலை அலங்கரிக்கும்
கரும்பு வாழை மஞ்சள்கொத்து கட்டாக வந்திறங்கும்
காய்கறி புத்தரிசி கூடையிலே நிறைந்து வரும்
வானோரின் காலைதினம்பொங்கல்தினம்  துவங்கி விடும்
ராசியாம் மகரத்தில் ஆதவன் அருள்செய்யும் நேரம்
கோலமிட்ட முற்றத்தில் முக்கோண அடுப்பு வைத்து
பாலுடன் புத்தரிசி பானையிலே வெந்திடவே
பொங்கிவரும் அழகு கண்டு பூரித்து ஆர்பரித்து
தங்குக இன்பம் என்று ஆண்டவனை வேண்டி நிற்பார்
புதிய அறுவடை காலமிது புத்தாண்டு பூபாளம்
இனிமையின் அனுராகம் என்றென்றும் பொற்காலம்
மறுதினம் மாக்களுக்கு நன்றி கூறும் நன்னாளாம்
மாடுகளை அலங்கரித்து பொங்கலிட்டு பூஜை செய்வர்
சல்லி கட்டி மாடுகளை ஓடவிட்டு மகிழ்ந்திடுவர்
மறக்காமல் சோதரனின் நலன் வேண்ட அதன் மறுநாள்
பச்சைமஞ்சள் குறியிட்டு மூத்தோரின் ஆசி பெற்று
கோலமிட்ட முற்றத்தில் முச்சாதம் இலையில் வைத்து
கூட்டமாய் வந்தித்து காகங்களை அழைத்திடுவர்
பழைய தீய சிந்தைகளை பொசுக்குவோம் போகியன்று
தழைத்து வளர்க நற்குணங்கள் பொங்கல் நன்னாள்தொட்டு











All rights reserved for the poem. Leela Narayanaswamy©

15.சங்ககாலப்பெருமை கொண்ட பொங்கல் திருநாளன்று


சங்ககாலப்பெருமை கொண்ட பொங்கல் திருநாளன்று
தங்குதடையின்றி தனம் நலம் பெருகிடவே
காலமெல்லாம் பாடுபட்ட கால்நடைகளுக்கு நன்றி
மண்ணுக்கு நன்றி சொல்ல புதுப்பானை அலங்காரம்
கீதையில் கண்ணன் சொன்னான் ஒளியில நான் சூரியனென்று
ஆதவனாம் ஏழுவண்ணரூபனுக்கு நன்றி சொல்வோம்
பொங்கும் புதுப்பானையிலே புத்தரிசி சொல்லிடுமே
பொங்குக நல்லுணர்வாம் ஞானப்பொங்கலென்று











All rights reserved for the poem. Leela Narayanaswamy©