Sunday, December 14, 2014

32.கல்லாம் என்மனதில்

கல்லாம் என்மனதில் சொல்லாமல் நீ வந்ததேன்
கடலில் அலையென இரண்டறக் கலந்ததேன்
கண்ணிமைப்பொழுதில் கனவாய் மறைந்ததேன்
கனலான என்கண்உன் நிழல் தேடி அலையுதே (கல்லாம்)

நிறையும் என்விழிகள் ஆகும் நீரருவியாய்
நீ இங்கில்லைஎனும் நினைவின் சுழலியால்
பாடாத கவிதையே மறையாத ஓவியமே
காயாத புதுமலரே கண்மணி ஆனவளே
உறவாடி நீ நின்ற காலம் நினைத்தாலே
உயிரின் தாளம் தடமிடறிப் போனதே      (கல்லாம்)

இளநெஞ்சின் கனவிற்கு புதுநிலவானவளே
இதயவீணையின் நாதமாய் நின்றவளே
அறிகிலையோ நீ என் உணர்வின் அலைகள்
அன்றும் இன்றுமென் விழிநீரின் மொழிகள்
ஆவதொன்றுமிலை நீ எனக்கில்லை அறிவேன்
ஆயினும் தேடுகிறேன் தளராத மனமுமாய் (கல்லாம்)
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.

No comments:

Post a Comment