Sunday, February 21, 2010

16.பாராமுகம் ஏனோ

பாராமுகம் ஏனோ
பதமலர் பணிந்தேன் அம்மா
பார்வதியே பரந்தாமன் சோதரியே

முப்புரம் எரித்தவனின்
இடப்புறம் அமர்ந்தவளே
முதலும் முடிவும் நீ
மூவுலகும் நிறைந்தவளே
மாகாளி மாதங்கி
மாங்காட்டு பகவதியே
வேண்டுவதுன் திருவருளே
வேற்காட்டில் வாழ்பவளே

சம்பந்தர்க்கருள் செய்ய
பாலன்னம் கொடுத்தாயே
காளிதாசன் நாவசைத்து
காவியங்கள் படைத்தாயே
அதர்மங்கள் அழிந்திடவே
அவதாரம் எடுத்தாயே
விந்தையில்லை உன் கருணை
விளங்குவதுன் தாயன்பே

வினை தீர்க்கும் ஆனைமுகன்
அருள் செய்யும் ஆறுமுகன்
அன்னையே அருள்வாயே
உலகாளும் உமையவளே
பரமனின் நாயகியே
பாபங்கள் தீர்ப்பாயே
அகார உகார
ரூபிணியே மஹாமாயே

In English alphabet:

thaaye saranam

paaraamugam eno
pathamalar paninthen ammaa
paarvathiye paranthaaman sothariye

muppuram eriththavanin
idappuram amarnthavale
muthalum mudivum nee
moovulagum nirainthavale
maakaali maathangi
maangaattu bagavathiye
venduvathun thiruvarule
verkaattil vaazhpavale

sambandarkkarul seyya
paalannam kodutthaaye
kaalithaasan naavasaiththu
kaaviyangal padaiththaaye
atharmangal azhinthidave
avathaaram eduththaaye
vinthaiyillai un karunai
vilanguvathun thaayanpe

vinaitheerkkum aanaimugan
arul seyyum aarumugan
annaiye arulvaaye
ulagaalum umaiyavale
paramanin naayagiye
paapangal theerppaaye
akaara ukaara
roopiniye mahamaaye

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

15. கிழக்குதிப்போன் ...........வருவாய் ஸ்ரீராமா

கிழக்குதிப்போன் தலைமுறையில் வந்தவனே வா வா வா
வாழ்வு நெறிமுறை தனையே வாழ்ந்து காட்டியவா வா 
அழகுமகள் சீதை மனம் கவர்ந்த ரகுநாதா வா
வருவாய் ஸ்ரீராமா...

கார்முகில் வண்ணா வா பார் போற்றும் வள்ளலே வா
ஓர் சொல் ஓர் அம்பே ஓர் தாரம் என்றவா வா
பரசுராமன் சினம் தீர்த்த பரமனே நீ வா வா வா
வருவாய் ஸ்ரீராமா...

அகலிகை சாபம் தீர்த்த அய்யனே நீ வா வா வா
குகனுடனே ஐவரான குணாதிபா நா வா வா வா
சுக்ரீவன் துயர் தீர்த்த தூய நண்பா வா வா வா
வருவாய் ஸ்ரீராமா...

கோசலை திருக்குமரா நீ இங்கு வா வா வா
தசரதன் தவப்புதல்வா தலைமகனே வா வா வா
அசுர குலம் அழிந்திடவே வில்லேந்தி நின்றவா வா
வருவாய் ஸ்ரீராமா...

பாசமுடன் பரதனுக்கு பாதுகையை அருளியவா
நேசமுடன் அனுமனையே அணைத்து மகிழ்ந்தவா வா
தாசனாம் வீடணனை காத்த காருண்யனே வா
வருவாய் ஸ்ரீராமா...

தந்தை சொல் தட்டாத தனயனே நீ வா வா வா
முந்தைப்பிணி தீர்த்தருளும் எந்தையே நீ வா வா வா
கந்தனின் அன்னைதன் சோதரனே வா வா வா
வருவாய் ஸ்ரீராமா...

சித்திரை நவமியிலே அயோத்தியில் தோன்றியவா 
சித்தர்கள் போற்றும் திருமுகத்தோனே வா வா வா
பத்து தலை ராவணனை வதித்தவனே வா வா வா
வருவாய் ஸ்ரீராமா...

In English alphabet:

varuvaay sreerama

kizhakkuthippon thalaimuraiyil
vanthavane vaa vaa vaa
vaazhvu nerimurai thanaiye
vaazhnthu kaattiyavaa vaa vaa
azhagumakal seethai manam
kavarntha raghunaathaa vaa
varuvaay sriraamaa...

kaarmukil vannaa vaa
paarpotrum vallale vaa
or sol or ambe
or thaaram endrava vaa
parasuraaman chinam theerththa
paramane nee vaa vaa vaa
varuvaay sriraamaa...

agaligai saapam theerththa
ayyane nee vaa vaa vaa
guhanudane aivaraana
gunaathipaa nee vaa vaa vaa
sugreevan thuyar theerththa
thooya nanpaa vaa vaa vaa
varuvaay sriraamaa...

kosalai thirukkumaraa
nee ingu vaa vaa vaa
dasarathan thavapputhalvaa
thalaimakane vaa vaa vaa
asurakulam azhinthidave
villenthi nindravaa vaa
varuvaay sriraamaa....

paasamudan barathanukku
paathukaiyai aruliyava
nesamudan anumanaiye
anaiththu makizhnthavaa vaa
daasanaam veedananai
kaaththa kaarunyane vaa
varuvaay sriraamaa...

thanthai sol thattaatha
thanayane nee vaa vaa vaa
munthaippini theerththarulum
enthaiye nee vaa vaa vaa
kanthanin annaithan
sotharane vaa vaa vaa
varuvaay sriraamaa...

chiththirai navamiyile
ayodhiyil thondriyavaa
chiththarkal potrum
thirumukaththone vaa vaa vaa
paththu thalai raavananai
vathiththavane vaa vaa vaa
varuvaay sriraamaa...

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

14. ஓடக்குழலூதும்

ஓடக்குழலூதும்
ஒய்யாரக் கண்ணா என்
உள்ளம கொள்ளை கொண்டு
எங்கொளிந்தாய்

தேடி தேடி அலைந்தேன்
தெய்வ திருக்குமரா
தேவகி தேவபாலா
கோகுல கோபபாலா

கோபியர் ஆடை தன்னை
ஒளித்த கதை சொல்லிடவோ
ஒளிந்து வெண்ணை உண்டு
சட்டி உடைத்த கதை சொல்லிடவோ
கண்ணன் என்றால் மனம் கவரும
கள்வன் என்றும் பேருண்டோ
கார்முகில் வண்ணா நீ
மறைந்திருந்து கேட்பதுண்டோ

கோதை கோர்த்த பூமாலை
ராதை காத்த மனச்சோலை
பூந்தான பக்தியிலே
பூத்த பெரும் பாமாலை
இதில் எங்கொளிந்தாயோ
ஏங்கி நின்றேன் கோவிந்தா
ஆதிமூலப் பொருளே
இங்காடி வாராய் அரவிந்தா

In English alphabet:

kuzhaloothum kanna

odakkuzhaloothum
oyyaarakkannaa en
ullam kollai kondu
engolinthaay

thedi thedi alainthen
deiva thirukkumaraa
devaki deva baalaa
gokula gopa paala

gopiyar aadai thannai
oliththa kathai sollidavo
olinthu vennai undu
chatti udaiththa kathai sollidavo
kannan endraal manam kavarum
kalvanendrum perundo
kaarmukil vannaa nee
marainthirunthu kelppathundo

kothai korththa poomaalai
raadhai kaaththa manachcholai
poonthaana bhakthiyile
pooththa perum paamaalai
ithil engolinthaayo
yengi nindren govindaa
aathimoola porule
ingaadi vaaraay aravinthaa

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Wednesday, February 17, 2010

13.ஆடும் சிலை ஒன்று கண்டேன்

ஆடும் சிலை ஒன்று கண்டேன் - அவன்
ஆடலுக்கு அரசனாகும்
நடராசன் என்றறிந்தேன்
ஆடும் பிறை முடிமேல்
ஓடும நதியை கண்டேன்
ஆலகாலவிடம் உண்ட
கண்டத்தில் அரவம் கண்டேன்

ஆறுமுகன் அவதரித்த
முக்கண்ணன் முகம் கண்டேன்
ஆடும் புலியாடை கண்டேன்
அன்னைதனை இடமும் கண்டேன்
ஆடும் பொற்பாதமொன்றை
தூக்கிநிற்கும் அழகு கண்டேன்
ஆனந்த நடனமிடும்
அம்மையப்பன் என்றறிந்தேன்

அயனரி அறியாத
அரனைக் கண்டேன் - பிரம்
படி கொண்டு மண்சுமந்த
மகராசன் என்றறிந்தேன்
அடியவர்க் கடியவனாம்
எளியவர்க் கினியவனாம்
ஈசனிவன் பொற்பாதம்
சரணமென தொழுது நின்றேன்

In English alphabet:

aadum nateshaa

aadum silai ondru kanden - avan
aadalukku arasanaakum
natarajan endrarinthen
aadum pirai mudimel
odum nathiyai kanden
aalakaala vidam unda
kandaththil aravam kanden

aarumugan avathariththa
mukkannan mugham kanden
aadum puliyaadai kanden
annaithanai idamum kanden
aadum porppaathamondrai
thookki nirkkum azhaku kanden
aanantha nadanamidum
ammaiyappan endrarinthen

ayanari ariyaatha
aranai kanden - piram
padi kondu manchumantha
maharajan endrarinthen
adiyavark kadiyavanaam
eliyavark kiniyavanaam
eeshanivan porppaatham
saranamena thozhuthu nindren

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Thursday, February 11, 2010

12.முருகா

முருகா மால் மருகா
செந்தூர் அழகா செல்வக்குமரா
உளம் உருகி உன்னை அழைத்தேன்
ஓடி வருவாய் உமைபாலா

தேவர் குறையைத் தீர்க்க தீயரைத்
தீர்த்த வேலவா வருவாயே - தினை
மாவும் தேனுமாய் தந்த வள்ளியின்
தலைவா தஞ்சம்அடைந்தேனே(முருகா)

பரம்பொருளினுண்மை உந்தைக்குணர்த்திய
விந்தை பாலனே கந்த வேளே
ஐங்கரனுக்கு இளவலே சரணம் சரணம்
அரனுக்குகந்தோனே ஆறுமுகனே (முருகா)

In English alphabet:

muruga

murugaa maal marukaa
senthur azhakaa selvakkumaraa
ullam uruki unnai azhaithen
oodi varuvaai umaibala...

devar kurayai theerkka theeyarai
theertha velava varuvaye - thinai
maavum thenumai thantha valliyin
thaliva thanjam adainthene... (muruga)

paramporulinunmai unathaikkunarthiya
vinthai balane kanda vele
ainkaranukku ilavale sharanam shranam
aranukkukanthone aarumughane... (muruga)

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

8.கண் சிமிட்டும் தாரங்களே,

கண் சிமிட்டும் தாரங்களே,
காதல் செய்யவரும் வெண்ணிலவே,
ஒளிவதுமேனோ... மேகத்திலே...

மேளம் கொட்டி வரும் மின்னல்,
தாளம் தட்டி வரும் மழை நீர்,
இள நெஞ்சில் ஊறும் இந்த ராகம்,
என் இனிய காதலிக்கு சொந்தம்...
நான் பாடும் கீதத்தின் இசை அவளே - என் முன்
தேனுறும் மலர் போல சிரித்தவளே...

வளைந்தோடும் நதி அழகே...
வளைந்தாடும் சின்ன இடை அழகே...
ஒளித்தாயே உன்னோடென்னையே...

மழையில் நனைந்ததும்...
நீ நாணிக் குழைந்தாயே மண்ணே...
விரகம் தீர்க்க வானம் வந்ததே...
மழையில் நனைந்ததும்...
நீ நாணிக் குழைந்தாயே மண்ணே...
விரகம் தீர்த்த வானம்... ஓ...
காதல் மழையில் நான் நனைந்தேனே...
ஒரு பெண்ணின் நினைவிலே மெலிந்தேனே...
துடித்த உதடுகளை நனைத்து மெல்ல...
ஒரு தனித்த இடம் தேடி அலைந்தேனே...

முத்தமிட்டே... முத்தே உன்னை
சத்தம் இன்றி மெல்ல அணைத்தேனே...
அத்தனையுமே என் கனவிலே...

In English alphabet:

kathaliye... kathaliye...

kann chimittum thaarangale,
kaathal seyyavarum vennilave,
olivathumeno meghaththile...

melam kotti varum minnal,
thaalam thatti varum mazhai neer,
ila nenjil uurum intha raagam,
en iniya kaathalikku sontham...
naan paadum geethathin isai avale - en mun
thenuurum malar pola chiriththavale...

valainthodum nathi azhake,
valainthaadum chinna idai azhake,
oliththaaye unnodennaiye...

mazhaiyil nanainthathum...
nee naani kuzhainthaye manne...
viraham theerkka vaanam vanthahte...
mazhaiyil nanainthathum...
nee naani kuzhainthaye manne...
viraham theerththa vaanam... ooo...
kaathal mazhaiyil naan nanainthene...
oru pennin ninaivile melinthene...
thudiththa uthadukalai nanaiththu mella...
oru thanithta idam thedi alainthene...

muththamitte... muththe unnai...
chaththam indri mella anaiththene..,
aththanayume en kanavile...

All rights reserved for the poem. Leela Narayanaswamy©