Sunday, February 21, 2010

14. ஓடக்குழலூதும்

ஓடக்குழலூதும்
ஒய்யாரக் கண்ணா என்
உள்ளம கொள்ளை கொண்டு
எங்கொளிந்தாய்

தேடி தேடி அலைந்தேன்
தெய்வ திருக்குமரா
தேவகி தேவபாலா
கோகுல கோபபாலா

கோபியர் ஆடை தன்னை
ஒளித்த கதை சொல்லிடவோ
ஒளிந்து வெண்ணை உண்டு
சட்டி உடைத்த கதை சொல்லிடவோ
கண்ணன் என்றால் மனம் கவரும
கள்வன் என்றும் பேருண்டோ
கார்முகில் வண்ணா நீ
மறைந்திருந்து கேட்பதுண்டோ

கோதை கோர்த்த பூமாலை
ராதை காத்த மனச்சோலை
பூந்தான பக்தியிலே
பூத்த பெரும் பாமாலை
இதில் எங்கொளிந்தாயோ
ஏங்கி நின்றேன் கோவிந்தா
ஆதிமூலப் பொருளே
இங்காடி வாராய் அரவிந்தா

In English alphabet:

kuzhaloothum kanna

odakkuzhaloothum
oyyaarakkannaa en
ullam kollai kondu
engolinthaay

thedi thedi alainthen
deiva thirukkumaraa
devaki deva baalaa
gokula gopa paala

gopiyar aadai thannai
oliththa kathai sollidavo
olinthu vennai undu
chatti udaiththa kathai sollidavo
kannan endraal manam kavarum
kalvanendrum perundo
kaarmukil vannaa nee
marainthirunthu kelppathundo

kothai korththa poomaalai
raadhai kaaththa manachcholai
poonthaana bhakthiyile
pooththa perum paamaalai
ithil engolinthaayo
yengi nindren govindaa
aathimoola porule
ingaadi vaaraay aravinthaa

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

5 comments:

  1. ஒளிந்திருக்கும் கண்ணனை ஓடிவரச்செய்யும் பக்திரசம் பொதிந்துள்ள மிக அருமையான பாடல்! எளிமையும் அழுத்தமும் நிறைந்த வரிகளிலே இசையும் நிறைந்துள்ளது! ‘பாகேஸ்ரீ’யில் பாடிப்பார்த்தேன் ! அருமை ! மிக்க நன்றி! - கே.பாலாஜி

    ReplyDelete
  2. Thank you for your appreciation. I have tunes for all my songs.. :)

    ReplyDelete
  3. the raagaa set for this was pakeshree only. what a coincidence!

    ReplyDelete
  4. I am so happy to hear about the Ragam! yes, I really found that it was set to Bageshree so aptly! Thank you once again !

    ReplyDelete