ஆடும் சிலை ஒன்று கண்டேன் - அவன்
ஆடலுக்கு அரசனாகும்
நடராசன் என்றறிந்தேன்
ஆடும் பிறை முடிமேல்
ஓடும நதியை கண்டேன்
ஆலகாலவிடம் உண்ட
கண்டத்தில் அரவம் கண்டேன்
ஆறுமுகன் அவதரித்த
முக்கண்ணன் முகம் கண்டேன்
ஆடும் புலியாடை கண்டேன்
அன்னைதனை இடமும் கண்டேன்
ஆடும் பொற்பாதமொன்றை
தூக்கிநிற்கும் அழகு கண்டேன்
ஆனந்த நடனமிடும்
அம்மையப்பன் என்றறிந்தேன்
அயனரி அறியாத
அரனைக் கண்டேன் - பிரம்
படி கொண்டு மண்சுமந்த
மகராசன் என்றறிந்தேன்
அடியவர்க் கடியவனாம்
எளியவர்க் கினியவனாம்
ஈசனிவன் பொற்பாதம்
சரணமென தொழுது நின்றேன்
In English alphabet:
aadum nateshaa
aadum silai ondru kanden - avan
aadalukku arasanaakum
natarajan endrarinthen
aadum pirai mudimel
odum nathiyai kanden
aalakaala vidam unda
kandaththil aravam kanden
aarumugan avathariththa
mukkannan mugham kanden
aadum puliyaadai kanden
annaithanai idamum kanden
aadum porppaathamondrai
thookki nirkkum azhaku kanden
aanantha nadanamidum
ammaiyappan endrarinthen
ayanari ariyaatha
aranai kanden - piram
padi kondu manchumantha
maharajan endrarinthen
adiyavark kadiyavanaam
eliyavark kiniyavanaam
eeshanivan porppaatham
saranamena thozhuthu nindren
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
அழகான இந்தப் பாடலின் வரிகளில் அம்பலவாணரின் ஆட்டத்தையே கொண்டுவந்துவிட்டீர்கள் ! அருமையான பாடல் ! வாழ்த்துக்கள் !
ReplyDelete-கே.பாலாஜி
Thank you!! :)
ReplyDelete