Thursday, March 4, 2010

18.அரிதுனை அறிவது ஆனந்தகிருஷ்ணா

அரிதுனை அறிவது ஆனந்த கிருஷ்ணா
ஆலிலை பள்ளி கொண்டவா
இனிதுனை நினைப்பது இகபர சுகமது
ஈரேழு உலகங்கட்காதாரமானது

உரலில் கட்டுண்டவா உலகளந்த பாலகா
ஊதுகுழல் ஏந்தியவா கோபியர் திலகா
என்றும் நினைத்திட்டால் எளிதுனை அடைவது
ஏகாந்த நாளை கொண்டால் எட்டிடும் சுகமது

ஐயம் கொண்ட அர்ஜுனனை கீதை பாடி மீட்டவா
ஓன்றல்ல இரண்டல்ல உன் லீலை ஆண்டவா
ஓங்கார ரூபனே சத்தியத்தின் நாயகனே
ஔவைக்குகந்த பாலன் முருகனின் மாமனே

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment