யமுனா நதிக்கரையில்
கண்ணனின் காலோசை அங்கு
ராதையின் சிரிப்பலையில்
கலந்ததே குழலோசை
மாதவா மதுசூதனா என்ற
ராதையின் குரலோசை
மதி மயங்கினேன் நீளாதோ
இக்கனவென பேராசை
கண்ணா .... கண்ணா... கண்ணா...
ஏழு வயதில் குறும்பும் குழலுமாய்
இடையபெண்டிரை மயக்கியே
ராசக்ரீடையை அருளியே
பக்திபரவசமாக்கியே
ஒருநிலைப்பட்ட பக்திநிலையினை
உலகிற்கங்கு உணர்த்தினாய்
கண்ணா... கண்ணா... கண்ணா...
கண்ணா உனது கீதை சொல்லும்
உலக நீதி வீதிகள்
வழி நடந்தால் காணுமே
உந்தன் காலடி சுவடுகள்
கண்ணா... கண்ணா... கண்ணா...
கண்ணா எனது கவிதையில் நான்
காண்பதுந்தன் மலர்முகம்
கனவில் உன்னைக் கொஞ்சினேன்
அதுந்தன் அருள் எனும் அதிசயம்
கண்ணா... கண்ணா... கண்ணா...
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
No comments:
Post a Comment