Tuesday, April 13, 2010

24.கடலலை வந்து

கடலலை வந்து மோதும்போது பல
கரைகள் தனை இழந்து கரையலாம்
காற்றலை வந்து மோதும்போது பல
மரங்கள் வேரிழந்து வீழலாம்
உன் அருளலை வந்து மோதினால் என்னில்
இருளலை நீங்கி மிளிருவேன்
என் கவியலை மோதி மகிழ்ந்துந்தன்
கயல் விழியிலை நன்கு மலருமே

கடலலை உனது இருக்கையோ அந்த
ஆலிலைதான் படுக்கையோ
எந்நிலையிலும் நிலைகுலைவில்லா திட
மனநிலை மக்கட்க்குணர்த்தவோ
உரலினை உருட்டிகொண்டன்று நடை
பழகிய பால கோபனே
நரகனை அழித்தந்நாளினை தீப
ஒளி எனத் திகழச்செய்தோனே


All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment