கண்ணன் சகோதரி கைலாயன் காதலி
காருண்யரூபிணி காதம்பரி கௌரி
மங்கொம்பில் அருளிடும் மாதா பூரணீஸ்வரி
மங்களரூபிணி மரகதவல்லி நீ
சித்திரை மாதத்தில் சிறப்புடன் திருவிழா
சிதம்பரன் நாயகிக்குவந்திடும் பெருவிழா
நல்லவர் நலம் பெற அல்லவர் அழிவுற
அன்னையின் அருள் பெற ஆற்றிடும் அரும்விழா
ஈரைந்து தினங்களும் பாட்டும் பரதமும்
இனிய நாதத்தில் நிறைந்திடும் நெஞ்சமும்
வட்டக வாலேந்தும் வனதுர்க்கே பகவதி
வையகம் வாழ்ந்திட வரமருள் வைஷ்ணவி
எளிமையான, எனில் ஆழமான வரிகள் ! சரளமான மொழி ! ஆனந்த பைரவியில் அழகாக அனுபவித்துப் பாடமுடிந்தது ! சித்திரைத் திருவிழா சமயத்தில் அம்பாளின் பெருமை சொல்லும் இந்த அழகிய பாடலுக்கு நன்றி ! - பாலாஜி
ReplyDelete