Tuesday, April 13, 2010

27.அஞ்சன வண்ணா நீ

அஞ்சன வண்ணா நீ
ஓடி வருகையிலுன்
அடிமுடி உலையுதடா
என் நெஞ்சம் பதறுதடா

பட்டாடை கலைந்திடுமோ
பாதசரம் குத்திடுமோ
பிஞ்சுக்கால் அல்லவோடா
மெதுவே வாடா கண்ணா

கழுத்தில் மாலை ஆடுதடா
சின்னக்கண்ணா உந்தன்
கண்ணருகே வியர்த்தொழுகி
கண்மையும் கரையுதடா
மயிலிறகு பறக்குதடா
மணிவண்ணா மெதுவே வாடா
குயிலோசையை வெல்லும் உந்தன்
குழலினை எனக்குத்தாடா

வெண்ணை திருடும் கள்ளக்கண்ணா
உண்மை நானும் சொல்லவோ நீ
திருடுவது வெண்ணை அல்ல
வெள்ளை உள்ளம அல்லவோடா
மண்ணை உண்ட கண்ணா உன்னை
மடியில் இருத்தி கொஞ்ச வேணும
வேண்டுதலை ஏற்றங்கிந்த
அன்னையை நீ ஆட்கொள்ளடா

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment