Tuesday, April 13, 2010

26.மயிலிலை சூடிநின்ற

மயிலிலைசூடி நின்ற மாதவா மணிவண்ணா
கையிலை கூப்பி நின்றேன் கமலதள நயனா
ஆலிலை பள்ளி கொண்ட அஞ்சனவண்ணா உன்
கோயிலை நாடி வந்தேன் கோபிஜன ரமணா

கையில் குழலேந்தி கருணை விழிஏந்தி
காதலுடன் இலையரசி துளசிமாலை தோளேந்தி
பைய நடந்தெந்தன் பக்கலில் வந்தணைவாயோ
மெய்யான சுகம் ஒன்றென் மெய்யுணர வைப்பாயோ

அவலுண்டு பிணி தீர்த்தாய்
ஆடை தந்து பெண்மானம் காத்தாய்
மலைக்குடையில் மக்களை
மாமழையின்றி காத்து நின்றாய்
மலை சோதரா நீ எதைத்தந்தென் குறை தீர்ப்பாய்
அலைமகள் நாயகா உன் அருள் தந்தெனை காப்பாய்

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

1 comment:

  1. What to say! A real GIFT ! Wonderful lyrics ! very simple but elegant ! I sang this in YAMUNA KALYANI ! very nice ! Thanks !

    ReplyDelete