Sunday, December 14, 2014

57.ஆடிவா நீ ஆதிசக்தி

ஆடிவா நீ ஆதிசக்தி ஆயிரங்கண்ணாளே
நாடிவந்தே படையல் வைத்தே கூடிப்பாடுகின்றோம் (ஆடிவா)

பால்குடம் எடுத்தோம் இங்கே மாவிளக்கேற்றி வைத்தோம்
மாரியம்மா ....... முத்துமாரி.............                            ( ஆடிவா)

மாங்காட்டில் நீ காமாக்ஷி காசி விசாலாக்ஷி
காஞ்சியில் அயன் அரி அரனார் இவருன் ஆசனமாவாரே
பூமிதித்து வந்தோம் குண்டத்து காளியம்மா
பாழும் அசுரரைக் கொன்றேழு கபாலமணிந்தவளே
சிவந்த பட்டும் உடுத்தவளே மருவூர் அரசி மங்கலங்களருள்வாய்
அங்கயற்கண்ணீ .....அரியின் தங்காய் ..............(ஆடிவா)

அம்பும் வில்லும் கேடயமும் வேலும் சூலம் சக்ரமுமாய்
அபயமுத்திரை சங்குடனே எட்டு கைகளுமாய்
திருவாரூரில் ரௌத்ரி நீ திருமயிலையிலே கற்பகம் நீ
திருவேற்காட்டில் கருமாரி கருநிறம் கொண்டவளே
சமயபுரம்வாழ் உமையவளே சங்கரநாயகி  மங்கலங்களருள்வாய்
குங்குமச்செல்வீ .......ஓங்காரி தாயே..........(ஆடிவா)
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.

No comments:

Post a Comment