Sunday, December 14, 2014

60.வேல்பிடித்து மயிலேறி வா வேலவனே

சுலோகம்
ஒராறு முகங்களும் ஈராறு கரங்களும்
ஓங்காரரூபமாய் ஒளிரும் திருமேனியும்
ரீங்காரமாய் காதில் ஒலிக்கும் சஷ்டிகவசமும்
தீங்கிலாவாழ்வினை ஈன்றிடும் என்றுமே

பாட்டு
வேல்பிடித்து மயிலேறி வா வேலவனே
வேலுருவில் சொர்ணமலை வாழுமய்யா எங்கள் காவலனே
 குன்றுதோறாடும் குமரா திருச்செந்தூர் முருகய்யா
குறவள்ளியின் மணாளா சிவபாலா கதிர்வேலா
மயில்காவடியாடு சஷ்டிகவசம் பாடு
கந்தனுக்கு போடு ஹர ஹர ஹர ஹர                   (வேல்பிடித்து)

அழகுமுருக பாலா அரியாம் மாலுக்குகந்த மருகா
அலையும் மனதில் அமைதியை வேண்டினோம் அருள்வாய் ஆறுமுகா
அழகுமுருக பாலா அரியாம் மாலுக்குகந்த மருகா
அலையும் மனதில் அமைதியை வேண்டினோம் அருள்வாய் ஆறுமுகா
ஹரஹரோஹர  ஹர ஹர ஹர ஹர ஹரஹரோ
ஹரஹரோஹர  ஹர ஹர ஹர ஹர ஹரஹரோ
உமையவள் கொஞ்சிட உரு ஒன்றானவா
உந்தைக்கு குருவான  குமரனுக்கு ஹர ஹர         (வேல்பிடித்து)

புரமெரித்த பரமன் நெற்றிகண்ணுதித்த புதல்வா
சூரதாரகர்க்கெமனாய்நின்றவா  நீறு தந்தருள்வாய்
புரமெரித்த பரமன் நெற்றிகண்ணுதித்த புதல்வா
சூரதாரகர்க்கெமனாய்நின்றவா  நீறு தந்தருள்வாய்
ஹரஹரோஹர  ஹர ஹர ஹர ஹர ஹரஹரோ
ஹரஹரோஹர  ஹர ஹர ஹர ஹர ஹரஹரோ
ஆண்டியாய் நின்ற பழனிவாழ்திரு முருகய்யா
ஆணைமுகந்தன் அருமை இளவலுக்கு ஹரஹர (வேல்பிடித்து)

All rights reserved for the poem. Leela Narayanaswamy©
Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.





No comments:

Post a Comment