Tuesday, January 11, 2011

18.ழ எனும் எழுத்து-"பூவணிந்து பொலிவோடு "


தன் ஒரு குழந்தையின் அவலநிலை கண்டு தமிழ் அன்னையின் புலம்பல்

பூவணிந்து பொலிவோடு நிமிர்ந்து நின்றிருந்தாய்
புலவர் போற்றும் சங்ககாலத்தன்று
செல்லக்குழந்தையாய் இருந்த நீ இன்று
செல்லாக்காசாக ஆகிவிட்டாய்
சின்னாபின்னமாய் நிலைகுலைந்தாய் உந்தன்

தனித்தன்மையை நீ இழந்து நின்றாய்
உன்னை ஏன் இன்று பலரும் ஏற்கவில்லை?
உன் சப்தம் யாருக்கும் ஏன் பிரியமில்லை
தமிழனின் நாவுனக்கு காலனாய் வந்ததேன்?
அழித்துனை அருவமாய் ஆக்கி மகிழ்வதேன்?
ஏறும்பூர்ந்து கல்லும் தேயும் என்பார் தமிழனின்
நாவூர்ந்து நீ இன்று தேய்ந்தனையே.
அழகிய நீ இப்போது அழகில் இல்லை
பழத்தில் நின்றும் உன்னை நீக்கிவிட்டார்
வாழையில் நீ இல்லை செய்த பிழை அறியேனே
வழியிலும் நீ இல்லை கதி இன்றி நிற்கின்றாய்
உன் இடத்தில் "ள"வந்தாள் உனைத் தொலைத்த இடம் எங்கே?
அழுகையில் நீ இல்லை அதனால் நான் அழவில்லை
"தழை"ல் நீ இல்லை "தளை"இட்டு வைத்தார்கள்
குழந்தையில் நீ இல்லை குழந்தை நீ எங்கே சொல்
எழுத்தா? எளுத்தா? மொழியா? மொளியா?
எங்கும் உனைத்தேடி நான் மௌனமாய் கரைகின்றேன்
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

17.மனம் திறந்து ஒரு வார்த்தை"இறைவா நான் செய்த பாபம் என்ன?"




உயிரினங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனித்தன்மை வாய்ந்தது.
தன் இயல்பை இழக்க
யாரும் விரும்புவதில்லை.அங்கே

எதிர்ப்புகள் வார்த்தைளால் அல்லது செயல்பாட்டினால்
உடன் உணர்த்தப்படுகின்றன.இது எல்லா உயிர்களுக்கும்
பொதுவானது. இங்குதான்
நான் ஒரு உண்மையை உணர்த்த

விழைகிறேன்.எண்ணங்கள் வடிவம் கொள்வது

எழுத்துக்களால்

எனில் எழுத்துக்களின் தனித்தன்மை காக்கப்பட வேண்டும் அல்லவா?
எழுத்தக்கள் இடம் மாறினால்? அல்லது தவறாக உச்சரிக்கப்பட்டால்?
அது ஒரு கொலைக்குச் சமம் அல்லவா? எழுத்த்க்களின் எழில் அரசி
தமிழில்
வரும் "ழ" என்ற எழுத்து. தனிச்சிறப்பு வாய்ந்த இந்த

எழுத்தைக் கொடுமையாக

கொலை செய்பவர்கள் தமிழர்களே.

"வழி"யை "வளி"என்றும்

"மழை"யை "மளை" என்றும்


"பழ"த்தை"பளம்" என்றும் மிகத்தவறாக உச்சரிப்பவர்கள்
கீழ்த்தட்டில் மட்டுமல்ல மேல்தட்டில் உள்ளவர்களும் தான்.
தொலைக்காட்சிகளிலும் கூட இந்தக்கொலை இயக்குனர்களாலேயே
மிகச்சாதாரணமாக நடக்கிறது. இதனால் மற்ற மொழி பேசும் மக்களிடையே
தமிழில் "ழ" இல்லை என்ற உணர்வு வலுத்திருக்கிறது. இதற்கு உதாரணம்
வெளி மாநிலங்களில் "பழனி "பளனி" என்று எழுதப்பட்டிருப்பதே.
தமிழ்த்தாயின் அவயவங்களை சித்ரவதை செய்வது அத்தாயின் மக்களே.
இக்கொடுமை இந்தத் தாய்க்கு மட்டுமே நடந்து வருகிறது.
"என் அவல நிலையைச் சொல்லி அலற எனக்கு நாவில்லையே"
என்று தமிழ்த்தாய் மௌனக்கண்ணீர் வடிக்கிறாள் இதோ!
இறைவா நான் செய்த பாபம் என்ன?
இந்த அவலநிலை வந்ததென்ன?
என்னை ஊனமாக்கி நிறுத்திவிட்டார்
கண்ணைக் குத்திக் குருடாக்கி விட்டார்
என் மக்களிடம் முறையிட வழியில்லையே!
அவரன்றோ இந்நிலைக்குக் காரணங்கள்
எழுத்துக்கள் ஒரு மொழியின் கண்களன்றோ?
பழுது அடையின் பொருள் அங்கு மாறுமன்றோ?
சிறப்புறுப்பாம் "ழ"என்ற எழுத்தினோடு
சினம் வெறுப்பேதுமுண்டோ? சொல்வீர் ஐயா!










All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Monday, January 10, 2011

16.மாதமாம் மார்கழியில் வாசலில் கோலமிட்டு

மாதமாம் மார்கழியில் வாசலில் கோலமிட்டு
மையத்தில் வைத்திடுவார் சாணம் மேல் பூசணிப்பூ
காத்திருந்த தைமாதம் நாளை என்ற நிலையில் அங்கு
வரிசையுடன் உடன்பிறந்தான் வருவான் போகியன்று
உவகையுடன் உபசரித்து  மங்கையரும்   மகிழ்ந்திடுவர் 
உவலைதீர கூரையிலே பூளை வேப்பிலை கட்டிடுவர்
மாவிலைத்தோரணமும் வாசலை அலங்கரிக்கும்
கரும்பு வாழை மஞ்சள்கொத்து கட்டாக வந்திறங்கும்
காய்கறி புத்தரிசி கூடையிலே நிறைந்து வரும்
வானோரின் காலைதினம்பொங்கல்தினம்  துவங்கி விடும்
ராசியாம் மகரத்தில் ஆதவன் அருள்செய்யும் நேரம்
கோலமிட்ட முற்றத்தில் முக்கோண அடுப்பு வைத்து
பாலுடன் புத்தரிசி பானையிலே வெந்திடவே
பொங்கிவரும் அழகு கண்டு பூரித்து ஆர்பரித்து
தங்குக இன்பம் என்று ஆண்டவனை வேண்டி நிற்பார்
புதிய அறுவடை காலமிது புத்தாண்டு பூபாளம்
இனிமையின் அனுராகம் என்றென்றும் பொற்காலம்
மறுதினம் மாக்களுக்கு நன்றி கூறும் நன்னாளாம்
மாடுகளை அலங்கரித்து பொங்கலிட்டு பூஜை செய்வர்
சல்லி கட்டி மாடுகளை ஓடவிட்டு மகிழ்ந்திடுவர்
மறக்காமல் சோதரனின் நலன் வேண்ட அதன் மறுநாள்
பச்சைமஞ்சள் குறியிட்டு மூத்தோரின் ஆசி பெற்று
கோலமிட்ட முற்றத்தில் முச்சாதம் இலையில் வைத்து
கூட்டமாய் வந்தித்து காகங்களை அழைத்திடுவர்
பழைய தீய சிந்தைகளை பொசுக்குவோம் போகியன்று
தழைத்து வளர்க நற்குணங்கள் பொங்கல் நன்னாள்தொட்டு











All rights reserved for the poem. Leela Narayanaswamy©

15.சங்ககாலப்பெருமை கொண்ட பொங்கல் திருநாளன்று


சங்ககாலப்பெருமை கொண்ட பொங்கல் திருநாளன்று
தங்குதடையின்றி தனம் நலம் பெருகிடவே
காலமெல்லாம் பாடுபட்ட கால்நடைகளுக்கு நன்றி
மண்ணுக்கு நன்றி சொல்ல புதுப்பானை அலங்காரம்
கீதையில் கண்ணன் சொன்னான் ஒளியில நான் சூரியனென்று
ஆதவனாம் ஏழுவண்ணரூபனுக்கு நன்றி சொல்வோம்
பொங்கும் புதுப்பானையிலே புத்தரிசி சொல்லிடுமே
பொங்குக நல்லுணர்வாம் ஞானப்பொங்கலென்று











All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Thursday, September 9, 2010

39.ஓங்காரி



ஓங்காரி ஒய்யாரி உலகாளும் மீனாட்சி
மாங்காட்டு காமாட்சி வேற்காடு கருமாரி
திருமயிலை கற்பகமே திருச்சி சமயபுரத்தாளே
திருவாரூர் ரௌத்ரி நீ தீவினைகள் போக்கிடுவாய்

புன்னைநல்லூர் மாரியம்மா பொள்ளாச்சி மாசாணி
புன்னய்க்கல் ஸ்ரீதுர்க்கே சென்னம்மா காளிதேவி
கோவை கோனியம்மாகோவில்பட்டி செண்பகமே
நாகை நீலாயதாக்ஷி நாடி வந்தோம் காத்திடுவாய்










All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Wednesday, September 8, 2010

38.நான்முகன் நாயகி


நான்முகன் நாயகி நாதரூபிணி
அன்னவாகினி அடிமலர் பணிந்தோம்

வெள்ளைத்தாமரையில் அமர்ந்தவளே
வெள்ளைப்பட்டாடைஉடுத்தவளே
ஏந்தும வீணையில் எழிலாய் இசையை
ஏழு ஸ்வரங்களில் கொணர்ந்தவளே
ஸ.. ரி... க.., ம... ப... த... நி... (நான்)

நாவின் அசைவில் குடிகொண்டவளே
நான்மறை போற்றும் கலைமகளே
சொல்லின் தலைவியே கல்வியின் கருவே
வளரும் செல்வமாய் வற்றாத கேணியாய்
மிளிரும் அறிவொளி தருவாய் தாயே (நான்)

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Tuesday, September 7, 2010

14.climax scene song-ம்.ம்.ம்...................உயிரோட்டமானவள்

climax scene song (sad part)
ம்.ம்.ம்...................உயிரோட்டமானவள்
நிழலெனத் தொடர்ந்தவள் தனிவழி போய்விட்டாள்
சுவாசமே.....பிரிய மனமில்லையே...
எழுதிய.... கவிதையில் எழுத்துப்பிழை என்னவோ?

in English letters
hm hm hm ...........uyirottamaanavaL
nizhalenath thodarnthavaL thanivazhi poyvittaaL
swasane.... piriya manamillaiye....
ezhuthiya... kavithaiyil ezhuththuppizhai ennavo?

in Malayaalam libi
ഹം.ഹം. ഹം..........ഉയിരോട്ടമാനവള്‍
നിഴലെന തൊടര്‍ന്തവള്‍ തനിവഴി പോയ്‌വിട്ടാള്‍
ശ്വാസമേ പിരിയ മനമില്ലൈയേ
എഴുതിയ...... കവിതൈയില്‍ എഴുത്തുപ്പിഴൈ എന്നവോ?

climax scene song (happy part)
இங்கிதா எனை விட்டெங்கோ மறைந்தவள் எதிரிலே
புன்னகை முகம் மலர எனை அழைக்கிறாள் மௌனமாய்
என்னிதயம் என்னில் வந்து சேர்ந்ததே
இன்பராகம் பாடித் தாலாட்டுதே
கண் பேசிடும் மொழி மௌனமே
எந்நாளும் வாழ்வில் வீசும் இனி தென்றலே
காதல் வெற்றி கண்ட சந்தோஷமே
ஆனந்தமே ம்.. ம்..ம்... ஆனந்தமே

in English letters
ingithaa enaivitengo marainthavaL ethirile
punnakai mukam malara enai azhaikkiRaL mounamaay
ennithayam ennil vanthu chernthathe
inparaagam paadith thaalaattuthe
kaNN pesidum mozhi mouname
ennaaLum vaazhvil veesum ini thendrale
kaathal vetri kanda santhoshame
aanathame....hm .. hmm.. hmm. aananthame

in Malayaalam libi
ഇങ്കിതാ എനൈ വിട്ടെങ്കോ മരൈന്തവള്‍ എതിരിലേ
പുന്നകൈ മുഖം മലര എനൈ അഴൈക്കിരാള്‍ മൌനമായ്‌
എന്നിതയം എന്നില്‍ വന്ത് ചേര്‍ന്തതേ
ഇന്‍പ രാഗം പാടിത്താലാട്ടുതേ
കണ്‍ പേശിടും മൊഴി മൌനമേ
എന്നാളും വാഴ്വില്‍ വീശും ഇനി തെട്രലേ
കാതല്‍ വെറ്റി കണ്ട സന്തോഷമേ
ആനന്തമേ ഹം...ഹം..ഹം.....ആനന്തമേ

Uyirotamaanaval - Original Composition by Krishna Raaj | Upload Music
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

13.அசையுமுன்

அசையுமுன் விழிகளின் ஓசையின் ராகங்கள்
அன்றுனைக் கண்ட நாள் கேட்டதென் காதிலே
என்னிடம் எதோ ஒன்றை இழந்து நின்றேன்
விண் தாண்டி வந்தவளுன்னைத் தேடி வந்தேனே

in English letters
asaium un vizhikaLin osaiyin raagankaL
andrunaik kanda naaL kettathen kaathile
ennidam etho ondrai izhanthu nnindrene
viNN thaandi vanthavaLunnaith thedi vanthene

in malayaalam letters
ആശൈയുമുന്‍ വിഴികളിന്‍ ഓശൈയിന്‍ രാഗങ്കല്‍
അന്ട്രുനൈക് കണ്ടനാള്‍ കേട്ടതെന്‍ കാതിലെ
എന്നിടം ഏതോ ഒന്ട്രൈ ഇഴന്തു നിന്ട്രേന്‍
വിണ്‍ താണ്ടി വന്തവളുന്നൈത്തേടി വന്തേനേ


Asayum un - Original Composition by Krishna Raaj | Upload Music
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Friday, July 23, 2010

37.பால் காவடி

பால்காவடி பூக்காவடி பழக்காவடி எடுத்தே
பாலனே பதம் பணிந்தோம் பழனிமலை ஆண்டவனே

மாங்கனிக்காக சினங்கொண்டகன்றே
மலை ஏறி ஆண்டியாக நின்ற குமரனே
பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா என்றே
அழைத்த தமிழ்ப்பாட்டிக்குகந்த குமரா வேலனே

பாலமுருகனே சரணம் பழனி முருகனே
வேலேந்தி வினை தீர்ப்பாய் வேங்கடன் மருகனே
ஆறுமுகனே ஐயா அழற்பிறந்தோனே
ஆறுபடை வீடு கொண்ட அழகுமுருக பாலனே

மலை ஏறி வந்து நின்றோம் மயில்வாகனனே
மாறாத பிலலிசூனியம் மலையேறி தொலைந்திடவே
கந்தசஷ்டி கவசம் கூறி கைகூப்பி நின்றோமே
கண்காணா தீவினைகள் காததூரம் அகன்றிடவே

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Thursday, July 8, 2010

12.கருவறையில் இருளொளியில்

கருவறையில் இருளொளியில்
இருந்த காலம் நம் நினைவிலில்லை
காலால் தாய்வயிற்றில்
உதைத்ததும் நம் நினைவிலில்லை
உருவாகி வெளிஉலகம்
கண்ட நேரம் நினைவிலில்லை
முதன்முதல் யாரைக்கண்டோம்?
பெற்ற தாயையா ? மாற்றாந்தாயையா
அழுததும் நம் நினைவிலில்லை தாயின்
அணைப்பில்உறங்கியதும் நினைவிலில்லை
பாலூட்டி நம்மைத் தாலாட்டிய
காலம் ஒன்றும் நம் நினைவிலில்லை
மூவிரண்டு வயதுவரை வாழ்ந்த
வாழ்க்கை நம் நினைவிலில்லை
கற்பனையில் இப்பொற்காலம்
கோபுரமாய் உயருதம்மா!
வாலிபப்பருவமும் இனிய
தோழமைக்குழாமும்
பொலிமைமாறாத பொன்னோவியமாய்
இன்றும் நம் நினைவிலுண்டு
வளர்ந்தபோது வாழ்க்கையின்
திசை அங்கு மாறியதும்
காதலில் கனிந்து துணையுடன்
அலிந்து சேர்ந்த காலமதும்
கல்வெட்டு போன்று மறையாது
நம் மனதில் நினைவிலுண்டு
நேசித்த உறவுகள் ஒவ்வொன்றாய்
அங்கு மறையும் நேரம்
பாசவலை அறுந்ததுவோ? மனம்
பதப்பட்டு இறுகிய்தோ
பார்வைக்கு இவ்விரண்டும்
ஒன்றுபோல கான்பதேனோ ?
கனிவும் தெளிவும் வாழ்க்கை
கற்றுத்தரும் பாடமாகும்
கல்லறையில் கிடக்கும்வரை
நம் மனதில் நிற்க வேண்டும்
All rights reserved for the poem. Leela Narayanaswamy©