பதம் தேடி வந்தோம் அம்மா
எங்களிடம் உள்ள குறை ஏராளம் தான் அம்மா
பொங்கிவரும் உன் கருணை தாயன்பின்
வடிவம் அம்மா
நெஞ்சே நீ மறவாதே..................
தஞ்சமென அன்னைதனை கொண்டிடுவாய்
நிறைவோடே
முக்கண்ணன் நாயகியாம் மஹாமாயையே
மனமுருகி ..............அழைப்பாயே ..
ஆதி அந்தமும் நீயே அனைத்து உயிர்களும் நீயே
மகிஷமர்தினி நீயே அந்த மாயன் சோதரி நீயே
மலைமகளும் நீயே மறைபோற்றும் மாதே
மாதவப்பயனும் நீயே மங்களம் அருளவாய் நீயே
மங்கொம்பு வாணிடும் தாயே ........(பாராமுகம்)
அசுரகுலம் அழிந்திடவே எழுந்ததுன் திரிசூலம்
ஒன்பது ராத்திரியும் ஒளிர்ந்ததுன் அவதாரம்
வட்டகவாளுடுடையவளே ......
வனதுர்க்கே வரமருள்வாய் மக்கள்க்கிங்கே ...
குணவதியே குலம்காக்கும் கற்பகமே ..
கணநாதன் ............. அன்னையே ..
திரிபுரசுந்தரி நீயே திருமூர்த்தி ஜனனியும் நீயே
அரனின் நாயகி நீயே இந்த அகிலமசைவதுன்னாலே
ஒளிர் சூர்யன் நீயே குளிர் நிலவும் நீயே
அகம்குளிர் இசையும் நீயே கண்குளிர் பரதம் நீயே
அருளிட வருவாய் தாயே ............(பாராமுகம்)
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
No comments:
Post a Comment