Saturday, June 26, 2010

33.கண்கட்டுவித்தை

கண்கட்டு வித்தை ஏனடா என் கண்ணா
உ ன் கமலக்கண் திறவாய் கண்ணா .....
குறைகள் ஏராளம் எனக்கிங்கு அனைத்தும் அங்கு
மறை போற்றும் கண்ணா மனநிறைவோடே களைந்திடுவாய்
கள்ளநோட்டம் வேண்டா கண்ணா
என் உள்ள்ம் நிறை கார்வண்ணா குருவாயூர் மணிவண்ணா
பீலி சூடி வா முன்னால் துளசிமாலையோடே கண்ணா
மரகதமே........ மாதவமே ............
ஆலிலையில் பள்ளிகொண்ட கண்ணா -அலை
கடலில் துயில் அனந்த சயனா -மண்ணை
உண்ட பவளவாய் கண்ணா -கட்
டுண்டு உரலோடிழை பாலா
குழலூதி என்னில் களியாடும் கண்ணா
கோகுலப்பெண்டிர் போற்றும் கோபகுமாரா நந்தனா
யாதவதிலகா கண்ணா ......(கண்கட்டு )
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment