Wednesday, June 30, 2010

9.நட்பு



நட்பு என்பது ஓர் மலராகும்
சிரிப்பு அதன் பல இதழ்களாகும்

நட்பு என்பது மரமாகும்
தளரும் மனதிற்கு தணல் ஏகும்

நட்பு என்பது உப்பாகும்
உணர்வாம் உணவின் ஆதாரமாகும்

நட்பு என்பது தண்ணீராகும்
வறளும் மனதின் தாகம் தீர்க்கும்

நட்பு என்பது அருமருந்தாகும்
புண்பட்ட மனதினை ஆற்றுவிக்கும்

நட்பு என்பது ஜன்னலாகும்
தேங்கும் மனதிற்கு காற்று நல்கும்

நட்பு என்பது ஊன்றுகோலாகும்
தடுமாறும் மனதினை நடக்க வைக்கும்

நட்பு என்பது விளக்காகும்
இருளும் மனதில் ஒளி வீசும்

நட்பு என்பது சங்கீதமாகும்
மனதாம் வீணையின் கம்பி மீட்டும்

நட்பு என்பது தாய்மடி ஆகும்
அயரும் மனதினை தாலாட்டும்

நட்பு என்பது தந்தையுமாகும்
அவசரகாலத்து அறிவுரை நல்கும்

நட்பு என்பது எல்லாமாகும்
மனதின் இளமைக்கு அமுதமாகும்
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment