தென்னமர தோப்புலதான் அய்யா
ஒன்ன நான் பாத்துருந்தேன்
பாதயோரம் நடக்கறச்சே நீ
காதோரம் கிசுகிசுத்தே
பக்கமா நீ நடந்தே நான்
வெக்கத்துல ஒதுங்கிகிட்டேன்
ஒன்ன கண்ட நா மொதலா நான்
துன்னுஞ்சோறு ருசிக்கலையே
கண்ணாடி பாத்தாலும் நான்
காணலையே என் மொகம்தான்
கண்ணுத்து பாத்தாலே நான்
கண்டேனே ஒன்மொகம் தான்
ராவுபகல் தெரியலையே என்
ரெண்டுகாலும் தளந்து போச்சே
நெருப்பா கொதிக்குறதே என்
ரெண்டுகண்ணும் சொருகிடுச்சே
மொத்தமா தாங்கலையே நான்
சத்தம் போட்டா தப்பில்லையே
இதென்ன நோவு அய்யோ அம்மா
என்ன ரொம்ப வாட்டுதய்யோ
ஊர்கண்ணு படடுடுச்சோ என்னை
பேக்காத்து அடிச்சுடுச்சோ
மனசுதான் துடிக்குதய்யா இங்க
மருந்தா நீதான் வாருமய்யா
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
No comments:
Post a Comment