ககார ரூபிணி கற்பகவல்லி நீ
கதம்பவனம் வாழ் கல்யாணி அருள்புரி
கைகால்ய தாயினி கைலாசவாசினி
வையகம் போற்றும் மங்கள ரூபிணி
மங்கொம்பில் அருளிடும் வனதுர்க்கே பகவதி
செங்கமலக்கண்ணி சிவனேஸ்வரி கெளரி (ககார)
ஒங்காரரூபிணி ஐங்கரன் அன்னை நீ
வேங்கடன் சோதரி வேப்பிலைக்காரி நீ
ஓங்காரரூபிணி ஐங்கரன அன்னை நீ
வேங்கடன் சோதரி வேப்பிலைக்காரி என்
அகங்காரம் களைந்திட அருளொளி தந்திட
திகம்பரன் நாயகி திறந்திடு கண்ணை நீ (ககார)
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
No comments:
Post a Comment