Saturday, December 13, 2014

25.சிதறி விழும்

சிதறி விழும் பூக்களென சிரிக்கும் மத்தாப்பு
சின்னஞ்சிறு மழலைகளின் முகமலரில் சிரிப்பு
சிங்காரி கங்கையவள் வெந்நீரில் வருகை  தர
எங்கும் எண்ணைக்குளி புத்தாடையுடன் இனிப்பு
தீமையின் இருளகல தீபங்களின் ஆவளி
திருமகள் அருள் பெருக தீபமேற்றி தீபாவளி

நரகனெனும் அசுரனையே வதித்தனின்னாளே
ரகுராமன் வனவாழ்க்கை முடிந்ததின்னாளிலே
மாகாளி சினம் மாறி இந்நாளில் முகம் மலர
வங்கம் ஆற்றினிலே மிதக்கவிடும் தீபங்கள்
இமயம் முதல் குமரி வரை தீபங்களின் ஆவளி
மகிழ்வலை எதிரொலியாய் தீபமேற்றி தீபாவளி
  All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment