Sunday, December 14, 2014

56.அண்ணாமலைவாழ்

அண்ணாமலைவாழ் அருணாசலமே
     அரவமுன் மாலையாகும் நீலகண்டனே
சொக்கநாதனே அகத்தீஸ்வரா
    கையிலில் ஒலிக்குமே சாமவேதம்
உண்மைப்பொருளே உடுக்கையுடையாய்
     ருத்ராக்ஷரூபனே விஸ்வநாதனே
அயன் அரி அறியா அருட்பெரும் ஒளியே  (அண்ணாமலைவாழ்)

கார்த்திகை தீபங்கள் உயர்ந்தங்கிதா
    கண்காணாதுயரும் உன்முடி தேடியே
மாதொருபாகனே ஸ்ரீமகாதேவனே
     தழுவக்குழைந்தவா தொழுதே நின்றோமே
இடையில் புலித்தோலும் ஜடையில் பிறையுமாய்
   முடியில் காணுமிதா கங்கைநதியும்
நடையில் அடியார்தம் நாவில்
      ஊறிடும் மந்திரம் ஐந்தெழுத்தே  
 ஓம்   நமோ  நமசிவாய         {அண்ணாமலைவாழ்)

அரியும் ஐங்கரனும் தாளம் போடவே 
      ஆடும்கோலம் கொண்ட தில்லைநாதனே 
மகிழ்வாய் வில்வத்தில் முக்கண்ணுடையோனே
      மணிப்பூரில் வாழ் மகா காலேஸ்வரனே 
கோள்மாலை அணிந்தவா நீறாடி மகிழ்வாய் 
     நால்வரின் பாசுரம் பாடிட அருள்வாய் 
நடையில் அடியார்தம் நாவில்
      ஊறிடும் மந்திரம் ஐந்தெழுத்தே  
 ஓம்   நமோ  நமசிவாய         (அண்ணாமலைவாழ்)

All rights reserved for the poem. Leela Narayanaswamy©
Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.

No comments:

Post a Comment