Friday, December 12, 2014

53.ஆடு கண்ணா



ஆடு கண்ணா ஊஞ்சலாடு கண்ணா
அஞ்சனவண்ணா ஆடு கமலக்கண்ணா

கருங்கூந்தல்  காற்றில் கலைந்தோடி  ஆட
கண்ணே உன் மயில்பீலி  உடன்சேர்ந்து ஆட
முத்தாபரணங்கள் முடியில் அசைந்தாட
மயக்கும் கருவிழிகள் மலர்ந்து சிரியாட
மார்பில் துளசியோடு மணிமாலை ஆட
முத்தே மணிவண்ணா நீ ஊஞ்சல் ஆடு

காதில் குண்டலங்கள் குழைந்து குழைந்தாட
கிண்கிணி ஓசையுடன் கைவளை இசைபாட
இடையில் செருகிய ஓடக்குழல் குஞ்சம் ஆட
பட்டாடை பாங்காய் அங்குமிங்கும் ஆட
பாதசரம்  சலசலத்து மெல்லிசையாய் ஓசையிட
புன்சிரி முகவண்ணா நீ ஊஞ்சல் ஆடு
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment