Friday, December 12, 2014

54.கண்ணன் காப்பான்

கண்ணன் காப்பான் என்னைக் கண்ணன்  காப்பான் -மனக்
கவலைகளில்லயம்மா
என்னை அணைத்து  பஞ்சுக்கன்னம் பதிப்பான் -அந்த
வெண்ணை உண்ட கள்வனம்மா

கனவில் கண்டேன்  குழலூதும் கண்ணனை- கையைக்
கனிவாய் உயர்த்திச் சிரித்தான்
கட்டி அணைத்தே ஒரு முத்தம் கொடுக்க நான்
எட்டி நடந்தேன் ஒளிந்தான்
 All rights reserved for the poem. Leela Narayanaswamy©


No comments:

Post a Comment