Sunday, December 14, 2014

59. நான்மறை போற்றிடும்

 நான்மறை  போற்றிடும் நான்முகன் தேவிநீ நாவில் அருள்வாய் அம்மா
அநாதிகாலமாய் கானாம்ருதமுமாய் ஆதாரஸ்ருதியானவளே (நான்மறை)

பத்தைந்துமொன்றுமாம் மணிமாலையில்
           எழுத்தின் வடிவம் குறித்தவளே
நான்மறையோடு நன்னான்குமிரண்டான
            நல்லறிவின் ரூபமே தாள் பணிந்தோம் (நான்மறை)

எழிலாய்ப்போழியுமிசைமழையிலேழு ஸ்வரங்களுயர்ந்ததிதா
இடக்கையில் ஏந்தும் புத்தகமும் ஈன்றிடும் சகலஞானம்
துங்காதீரம்வாழும் தேவி சரணம் அம்மா
துங்காதீரம்வாழும் தேவி சரணம் அம்மா
கச்சபீ வீணையை மீட்டிடுமென் கானமனோகரி கண்திறவாய்
கச்சபீ வீணையை மீட்டிடுமென் கானமனோகரி கண்திறவாய்  (நான்மறை)

அம்பாபுரியாம் கூத்தனூரில் அருளிடும் ஆனந்த சரஸ்வதியே
இயலிசை நாடக ரூபம் நீயே ஈசனின் இளையவளருள்வாயே
வெண்பட்டுடுத்த வேணி வேண்டும் வரம் தருவாய்
வெண்பட்டுடுத்த வேணி வேண்டும் வரம் தருவாய்
வெண்தாமரை அமரும் வாக்வாதினி சாரதாதேவி நீ கண்திறவாய்
வெண்தாமரை அமரும் வாக்வாதினி சாரதாதேவி நீ கண்திறவாய் (நான்மறை)All rights reserved for the poem. Leela Narayanaswamy©
Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.


No comments:

Post a Comment