Thursday, December 25, 2014

63.மலைமகள் மகனே

மலைமகள் மகனே மாதவன் மருகனே
வேழமுகத்தோனே வேலவன் சோதரனே
ஐங்கரனே ஐயா ஆனந்த விநாயகா
மங்களம் புரிவாய் ஸ்ரீ கணநாதா

சரணம் சரணம் ஐயா சங்கரன் மகனே
இன்னல்கள் அகலவே முன்னில் வருவாயே
மலைமகள் கைப்பிடிமண்ணில் பிறந்தோனே
வேதமுதல்வனுன்னை மனமுருகி தொழுதோமே .

வேலன் காதல் நாடகத்தில் வேடமகள் வள்ளி முன்னில்,
ஓலமிடும் வாரணமாய் ரூபமேற்று நின்றோனே,
துன்டித்த தந்தமதை தூரிகையாய் பிடித்தோனே,
வலஞ்சுழி துதிக்கையோனே குலம் காக்க வருவாயே!
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

No comments:

Post a Comment