Sunday, December 14, 2014

55.தும்பிக்கையோனே துணை வருவாயே

சுலோகம்
ஐந்து கரங்களும் அருகணியும் திருமுடியும்
இன்னலறுத்திடும் என்றும் ஏத்தமிட்டோம் வித்தகனே

பாட்டு
தும்பிக்கையோனே துணை வருவாயே
சித்தி விநாயகா சிவன் மகனே

மலைமகள் பிடிமண்ணில் பிறந்த முதல்வனே
அலைமகள் நாயகனின் மருமகனே
வலஞ்சுழி விநாயகா தும்பை துலங்கு மார்பா
முப்பழம் அதிரசம் அப்பமொடவல்பொரி கைத்தலமோதகம்
கனிவுடன் கொள்வாய் கடம்பன்  சோதரனே   (தும்பிக்கையோனே)

தாய்தந்தையை வலம் வந்தன்று மாங்கனி பெற்றவனே
கமண்டலத்தை கவிழ்த்தன்றிங்கு காவிரி கொணர்ந்தவனே

ஐங்கரனாம் என் அய்யனே அல்லல்களகற்றும் வள்ளலே
கையிலை கூப்பி  அடிபணிகின்றோம் கயிலை கணபதியே (தும்பிக்கை)

வள்ளி முன்னன்று வேலனுக்காக வாரணமானவனே
சாமரக்கர்ணனே முழுமுதற்கடவுளே எருக்கில் மகிழ்பவனே

ஆனைமுகம் கொண்ட அய்யனே பானைவயிறோனே சரணமே
 கையிலை கூப்பி  அடிபணிகின்றோம் கயிலை கணபதியே (தும்பிக்கை)

All rights reserved for the poem. Leela Narayanaswamy©
Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.


No comments:

Post a Comment