Sunday, December 14, 2014

62.துன்பம் ஓட இன்பம் சேர

சுவாமியே சரணமய்யப்பா
துன்பம் ஓட இன்பம் சேர துணையாய் உனைத்தேடி இங்கே
குருபதமும் தொழுதே இருமுடி தாங்கி வந்தோம் அய்யனே  சரணம்அய்யனே

தூயவிரதம் இருந்தே நாங்கள் துளசிமாலை மார்பில் அணிந்தே
சபரிமலை ஏறிவந்தோம் சரணம் அய்யனே சரணம் அய்யனே

ஐந்துமலை வாழும் அய்யா புலிவா ....கனனே ......
ஆடிப்பாடி பேட்டையிலே வாவரை தொழுதோம் அய்யனே
அழுதைநதியில் முழுகிக் கல்லும் இட்டோம் அய்யனே சரணம் அய்யனே

கடினமிகு கரிமலைச்சாரலும் ஏறிக்கடந்து வந்தோம் அய்யா
அடியார்க்கு எளியவன் உன்னைப் பாடிநின்றோமே
கடினமிகு கரிமலைச்சாரலும் ஏறிக்கடந்து வந்தோம் அய்யா
அடியார்க்கு எளியவன் உன்னைப் பாடிநின்றோமே

பம்பை ...நதியாம் தக்ஷின கங்கையிலே புனிதநீராடி
தேவர் தொழும் மைந்தா அய்யா உன்னைத் தேடியே சரணம் அய்யனே
பம்பையிலே விளக்கும் கண்டு நீலிமலையில் சரங்குத்தி ஆடி
பந்தளனின் கண்மணி உன்னை நாடி வந்தோமே சரணம் அய்யனே

மாசில்லா சபரியும் வாழ்ந்ததோர் மாமலையாம் சபரிமலையும்
மாதவமே கடந்தோமே சரணம் அய்யனே
 மாசில்லா சபரியும் வாழ்ந்ததோர் மாமலையாம் சபரிமலையும்
மாதவமே கடந்தோமே சரணம் அய்யனே

கும்பளமாம் அருவியில் முழுகி மஞ்சள்மாதா தேவியை வணங்கி
படிபதினெட்டும்.....ஏறி வந்தோம் அய்யனே சரணம் அய்யனே

நீலமேகவண்ணன் மைந்தா நீலகண்டன் அருளிய புதல்வா
மணிமாலை கழுத்தில் அணிந்தே பிறந்த பாலனே...
மணிகண்டனாதனே ......ய்

காந்தமலையில் வாழும் அய்யா கருணை ஒளி மின்னும் செல்வா
காந்தமலை நாதனே......ய்

 புத்துருக்கு நெய்யபிஷேகமும் பொன்னணிகள் சூடிய மேனியும்
சுவாமியே சுவாமியே சுவாமியே சரணம் அய்யப்பா

கற்பூர ஒளியில் மின்னும் கண்கவர் திருமுகமும் கண்டோம்
வானுயரும் சரணம் ஒலியில் தனைமறந்து நின்றோமே சரணம் அய்யனே

வில்லேந்தி நின்ற வீரன் புலி ஏறி வந்த தீரன்
ஆஸ்ராமத்தஞ்சனமெழுதிய கண்டன் அய்யனே சரணம் அய்யனே
சரணம் அய்யனே சரணம் அய்யனே

All rights reserved for the poem. Leela Narayanaswamy©
Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.



No comments:

Post a Comment