Sunday, December 14, 2014

61.புற்றில் வாழ்ந்திடும் தேவா

புற்றில் வாழ்ந்திடும் தேவா போற்றிப்பாடுவோம் பாட்டு
புற்றில் வாழ்ந்திடும் தேவா வாராய் தாளத்தில் ஆடு (புற்றில்)

வளைந்தாடும் நேரம் மரக்கிளைகளும் ஆடிடுமே
மலையாளப்பெண்டிர் தாளத்தில் பாடுவரே புள்ளுவர்
குடத்தின்... தாளம் ........                                                            (புற்றில்)

படைபயக்கும் நீ படமெடுத்தால் ஜடைமுடியனின் அணிகலனே
விடைகாணா வினையும் தீர்ப்பாயே ........
படைபயக்கும் நீ படமெடுத்தால் ஜடைமுடியனின் அணிகலனே
விடைகாணா வினையும் தீர்ப்பாயே ........
அலைகடல் மேவும் அரி என்றும் அமரும் ஆசனம் நீ அன்றோ
அலைபோல் உயரும் துயரம் துடைப்பாயே .....
அலைகடல் மேவும் அரி என்றும் அமரும் ஆசனம் நீ அன்றோ
அலைபோல் உயரும் துயரம் துடைப்பாயே .....
மஞ்சள்தூவி வணங்கிடுவோம் முட்டை பாலிவை படைத்திடுவோம்
புற்றின் மேலே படமாய் வா வா வா .......                            (புற்றில்)

பிறந்த நேரத்துள்ள பிணிகள் நீக்குவாய்
     ஆயில்யம் பிறந்தோரின் ஆதங்கம் அகற்றுவாய்
ராகுகேது கிரக கோபம் போக்குவாய்
      நாகதேவா  ராகம் பாடி வணங்கினோம்
கனத்த மழையில் கண்ணனுக்கும் வசுதேவர்க்கும் குடையானாய்
யமுனைனதியைக் கடக்கத் துணைபோனாய் .......
கனத்த மழையில் கண்ணனுக்கும் வசுதேவர்க்கும் குடையானாய்
யமுனைனதியைக் கடக்கத் துணைபோனாய் .......
அயன்அரிஅரனாம் முத்தேவர் மகிழும் அன்பா அருளிடுவாய்
அடியவர் பாடும் பாட்டில் ஆடிடுவாய் .......
அயன்அரிஅரனாம் முத்தேவர் மகிழும் அன்பா அருளிடுவாய்
அடியவர் பாடும் பாட்டில் ஆடிடுவாய் .......
மஞ்சள்தூவி வணங்கிடுவோம் முட்டை பாலிவை படைத்திடுவோம்
புற்றின் மேலே படமாய் வா வா வா .......                            (புற்றில்)

All rights reserved for the poem. Leela Narayanaswamy©
Written for Mr. Sibu Sukumaran for an album according to tune already set in June 2010.

No comments:

Post a Comment