Thursday, November 26, 2009

11.അമ്പലപ്പുഴ കൃഷ്ണാ

പല്ലവി:
അടിയങ്ങള്‍ക്കാശ്രയം നീ അരവിന്ദാ...
അമ്പലപ്പുഴ കൃഷ്ണാ ഹരേ ശ്രീ ഗോവിന്ദാ...

അനുപല്ലവി:
ഭട്ടതിരി ശതദശകം ഫലപ്രദ മോക്ഷകം...
പത്മനാഭനെന്നും പ്രിയങ്കര ഭൂഷണം...

ചരണം 1:
ഈരാറു ദിവസങ്ങളും കളഭം കൊണ്ടഭിഷേകം...
ഇടതടവില്ലാതെ ഒഴുകുന്നു ജനപ്രവാഹം...
കണ്ണന്‍റെ തൃക്കയ്യില്‍ കണ്ടു ഞാന്‍ നവനീതം...
കായംമ്പു വര്‍ണ്ണാ കൃഷ്ണാ ദേഹിമേ ദര്‍ശ്ശനം...

ചരണം 2:
ഈശന്‍റെ വലം കയ്യില്‍ തിളങ്ങുന്നു പൊന്‍പതക്കം...
ഏഴര പോന്നാനയുടെ കഥ പറയും തൃപ്പതക്കം...
തിളങ്ങും നിന്‍ ദിവ്യ രൂപം തിന്മകള്‍ക്കു നാശകം
ദീന ദയാലാ കൃഷ്ണാ ദേഹിമേ ദര്‍ശ്ശനം...

ചരണം 3:
പൂന്താന ഭക്തി സ്തുതി ജയദേവര്‍ അഷ്ടപതി...
രാധ തന്‍ സ്നേഹശ്രുതി ഇതിലേതോ ഇഷ്ടസ്ഥിതി...
ഭവ ഭയ മോക്ഷകാ ഗിരിധരാ ശ്രീമുഖാ...
പാഹിമാം പാഹിമാം ദേഹിമേ ദര്‍ശ്ശനം...

All rights reserved for the poem. Leela Narayanaswamy©
enjoy this song in the famous singer Sri. Sharath Kumar in "DIVYAM" malayalam devotional song cd

10.കായാമ്പൂ വര്‍ണ്ണാ കൃഷ്ണാ

 കായാമ്പു വര്‍ണ്ണന്‍ കാളീയ മര്‍ദ്ദനന്‍
ഗോകുല ബാലന്‍ ദ്വാരകാ നാഥന്‍
ഗുരുവായൂര്‍ വാണിടും ശ്രീ കൃഷ്ണ രൂപം
മനസ്സില്‍ എന്നെന്നും നിറഞ്ഞു നില്‍ക്കേണമേ

കൃഷ്ണ ഹരേ ജയ കൃഷ്ണ ഹരേ
രാധ മാധവ വല്ലഭ കേശവ
ദേവകി നന്ദന ദേവ ദേവ പ്രിയ
യശോദ ബാലക രുക്മിണി വല്ലഭ
കൃഷ്ണ ഹരേ ജയ കൃഷ്ണ ഹരേ
രാധ മാധവ വല്ലഭ കേശവ
കൃഷ്ണ ഹരേ ജയ കൃഷ്ണ ഹരേ

ഗോപികാ രമണന്‍ വേണുഗാന ലോലന്‍
ഗോവര്‍ദ്ധന ഗിരിധരന്‍ ഗോപാലന്‍
പരമ പുരുഷനാം ഭഗവാന്‍റെ തിരുനാമം
പ്രതി ദിനം ജപിക്കുവാന്‍ വരം അരുളേണമേ

കൃഷ്ണ ഹരേ ജയ കൃഷ്ണ ഹരേ
രാധ മാധവ വല്ലഭ കേശവ
വസുദേവ തനയാ യദുകുല തിലകാ
ഭുവന സംരക്ഷക പാപ വിമോചകാ
കൃഷ്ണ ഹരേ ജയ കൃഷ്ണ ഹരേ
രാധ മാധവ വല്ലഭ കേശവ
കൃഷ്ണ ഹരേ ജയ കൃഷ്ണ ഹരേ

അമ്പലപ്പുഴയിലും ആറണ്മുളയിലും
അരുളിടും ആനന്ദ സുന്ദര രൂപന്‍
അനന്ദശയനനാം അക്ക്രുര പൂജിതന്‍
അര്‍ജുന പ്രിയ മിത്രം അരുളിടേണമേ

കൃഷ്ണ ഹരേ ജയ കൃഷ്ണ ഹരേ
രാധ മാധവ വല്ലഭ കേശവ
പങ്കജ ലോചന പവിത്ര തുളസി പ്രിയ
നന്ദ നന്ദനാ നവനീത ചോരാ
കൃഷ്ണ ഹരേ ജയ കൃഷ്ണ ഹരേ
രാധ മാധവ വല്ലഭ കേശവ
കൃഷ്ണ ഹരേ ജയ കൃഷ്ണ ഹരേ

കൃഷ്ണ ഹരേ ജയ കൃഷ്ണ ഹരേ ജയ
കൃഷ്ണ ഹരേ ജയ കൃഷ്ണ ഹരേ ജയ
കൃഷ്ണ ഹരേ ജയ കൃഷ്ണ ഹരേ
കൃഷ്ണ ഹരേ ജയ കൃഷ്ണ ഹരേ
All rights reserved for the poem. Leela Narayanaswamy©
enjoy this song in" DIVYAM" malayam devotional song cd 

9.അമ്മേ ശരണം

അമ്മയ്ക്ക്‌ പാദസരം കവിത
അമ്മയ്ക്ക്‌ പൊന്‍ മാല്യം ശ്രുതികള്‍
അമ്മയ്ക്ക്‌ മണിക്കിരീടം ഗീതങ്ങള്‍
അമ്മതന്‍ കാല്‍ക്കല്‍ എന്റെ ശരണം വിളി
പരമേശ്വരിയേ ഭഗവതി ശരണം
പങ്കജ ലോചനേ പാര്‍വതി ശരണം
മലയദ്വജന്‍ പുത്രി മഹാമായേ ശരണം
മഹിഷ മര്‍ദ്ദിനി മഹേശ്വരി ശരണം
അമ്മയ്ക്ക്‌ ഒഡ്യാണം താളം
അമ്മയ്ക്ക്‌ മണി മാല സ്വരങ്ങള്‍
അമ്മയ്ക്ക്‌ അര്ച്ചിയ്ക്കാന്‍ പദങ്ങള്‍
അമ്മതന്‍ കാല്‍ക്കല്‍ എന്റെ ശരണം വിളി
ചണ്ടമുണ്ടാന്തികേ ശരണം അമ്മേ
തൃപ്പാദ പത്മം മാത്രം ആശ്രയമേ
വട്ടകശൂലി ശ്രീപീഠ വാസിനി
ഇഷ്ടപ്രദായിനി പാഹിമാം വരദേ
അമ്മയ്ക്ക്‌ പട്ടാട സ്തുതികള്‍
അമ്മയ്ക്ക്‌ കാതിലോല നാദങ്ങള്‍
അമ്മയ്ക്ക്‌ കങ്കണം ഗീതാഞ്ജലി
അമ്മതന്‍ കാല്‍ക്കല്‍ എന്റെ ശരണം വിളി
അമ്മേ ശരണം ആനന്ദ ദായിനി
അഖിലാണ്ട കോടി ഭ്രഹ്മാണ്ട നായകി
ഇന്ദു കലാധര ഇഷ്ട പ്രാണേശ്വരി കലാധര
ഈശ്വരി സൃഷ്ടി സ്ഥിതി ലയ കാരിണി
അമ്മേ അമ്മേ ഹരിപ്രിയ സോദരി അമ്മേ
അനുഗ്രഹം ദേഹി അഖിലാണ്ടേശ്വരി
അന്നപൂര്‍ണ്ണേശ്വരി അഭീഷ്ട വരദേ
അമ്മേ അമ്മേ അനുഗ്രഹം ദേഹി അമ്മേ
അമ്മേ അമ്മേ അടിയനു ദര്‍ശ്ശനം തരണേ
അമ്മേ അമ്മേ അടിയങ്ങള്‍ക്കാശ്രയം നീയേ
അമ്മേ അമ്മേ അമ്മേ അമ്മേ...
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Thursday, November 19, 2009

7.நீதி காக்கும் நிர்மல ராமா...

பல்லவி:
நீதி காக்கும் நிர்மல ராமா...
விதி முறைகள் பொது அன்றோ அதில்
சதிக்கொரு விதி என இலையன்றோ... (நீதி)

அனுபல்லவி:
என் களங்கம் தீர்க்க தீ வளர்த்துன்
மனதை கல்லாய் ஆக்கினையே நீ...
உடலால் உனை பிரிந்தெனினும்
உள்ளத்திலுன்னோ டிணைந்தவள் நானே...
அன்பு மனதில் ஐயம் ஏனோ
அதன் விளைவிந்த நெருப்பு தானோ...
அன்பு மனதில் ஐயம் ஏனோ
அதன் விளைவிந்த நெருப்பு தானோ...
கற்பெனும் தீ எனைகாக்கும் சத்தியம் இங்கு நான் தீ குளிப்பேன்... (நீதி)

சரணம்:
செய்த பிழை நான் அறிந்தேனே...
பொய் மானை மோகித்தேன் மதி இழந்தேன் உனைப்பிரிந்தேன் அன்றே...
செய்த பிழை நான் அறிந்தேனே...
தாய் போலெனை நேசிக்கும் அன்பு தம்பியை இழித்துரைத்தேன நான்..
உன் பின்னோன் தன உயர் குணங்கள்
சினம் கொண்டு நான் கணம் மறந்தேனே...
பேய்க்குணம் கொண்டென் வாய்ச்சொல்லால்...
தீயின் கொடிதாய் சுட்டெரித்தேனே ...
யார் பொறுப்பார் இப்பிழையை நேரன்றோ இந்நீதி...
யார் பொறுப்பார் இப்பிழையை நேரன்றோ இந்நீதி...
தன்வினையே தன்னைச்சுடும் இன்றென் வினை எனை தீயில் சுடும்... (நீதி)

In English alphabet:

poRuppaayaa raamaa

Pallavi:
Neethi kaakkum nirmala rama..
vidhi muraikal pothuvanRo athil
sathikkoru vidhi ena ilaiyandro (Neethi)

Anupallavi:
en kalangam theerkka thee valarththun
manathai kallay aakkinaiye nee...
udalaal unai pirintheninum
uLLaththil unnodiNainthavaL naane...
anpu manathil ayyam eno athan viLaivintha neruppu thaano...
anpu manathil ayyam eno athan viLaivintha neruppu thaano...
kaRppenum thee enaikaakkum saththiyam ingu naan thee kuLippen (Neethi)

Charanam:
seytha pizhai naan aRinthene...
poy maanai mohiththen mathi izhanthen unaipirinthen andRe...
seytha pizhai naan aRinthene...
thaay polenai nesikkum anpu thampiyai izhiththuraithen naan...
un pinnon than uyar gunankal
chinam kondu naan kaNam maRanthene...
peykkunam konden vaaychchollaal
theeyin kodithaay chutteriththene...
yaar poRuppar ippizhaiyai neranRo inneethi...
yaar poRuppar ippizhaiyai neranRo inneethi...
thanvinaye thannaichudum indRen vinai ennai theeyil chudum... (Neethi)

This poem was written for the music composed by Murali Ramanathan.

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

6. மாறும் மனதில் மாறாது உன் முகம்.

மாறும் மனதில் மாறாது உன் முகம்...
நாளும் நினைவாய் களியாட எனை இழந்து தவித்தேனே...
காந்தமாய் கவர்ந்து, காதலாய் அணைத்து,
சாந்தமாய் சிரித்து நொடியில் பறந்தாயே
கொடியிடை வடிவழகியே...

விண்ணுலா வெண்ணீலவின் ஒளியென, இதயம் நிறை
புன்னகை பூத்து வரும் உன் முகம்...
கண்முன்னே மறைந்ததுமேன்...
தண்நிறை புண்ணாற்றும் சொற்சுவை - கனிமொழியே
எனை இன்று கவிஞனாய் மாற்றிடும்
மருந்தென நினைத்தேனே...
ஓ... ஓ... ஓ... இது -
நனவென விடாது காண்பதா கனாவாய் மறப்பதா
தெரியலையே...

ரதியுடன் மதனிணைந்த நிலையென - மனதிலனு-
ராகங்கள் தாளமுடன் நடமிட...
இன்பமழை பொழிந்ததுவே...
ஓ... ஓ... ஓ... ஓ...
வானவில் நிறங்களாம் ஏழுமாய் - கீதத்துடன்
ஸ்வரங்களாய் கணப்பொழுதென் நாவினில்...
கலந்திங்கு வந்ததுவே...
ஓ... ஓ... ஓ... இது -
நனவென விடாது காண்பதா கனாவாய் மறப்பதா
தெரியலையே...

In English alphabtet:

kaathalaay kaninthu...

maaRum manathil maaRaathu un mukam...
naaLum ninaivaay kaLiyaada enai izhanthu thaviththeney...
kaanthamaay kavarnthu, kaathalaay aNaiththu,
shaanthamaay siriththu nodiyil paRanthaaye
kodiyidai vadivazhakiye...

viNNulaa veNNIlavin oLiyena - ithayam niRai
punnakai puuththu varum un mukam...
kaNmunne maRainthathumen...
thaNniRai puNNaatRum choRchuvai - kanimozhiye
enai inRu kavinjanaay maatRidum
marunthena ninaiththeene...
oo... oo... oo... ithu -
nanavena vidaathu kaaNpathaa kanaavaay maRappathaa
theriyalaiye...

rathiyudan mathaniNaintha nilaiyena - manathilanu-
raakangkaL thaaLamudan nadamida...
inpamazhai pozhinthathuve...
oo... oo... oo... oo...
vaanavil niRangkaLaam eezhumaay - geethaththudan
swarangkaLaay kaNappozhuthen naavinil...
kalanthingu vanthathuve...
oo... oo... oo... ithu -
nanavena vidaathu kaaNpathaa kanaavaay maRappathaa
theriyalaiye...

This poem was written for the music composed by Murali Ramanathan.

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

8. நடுநிசியில் தேய்பிறையில்



 நடுநிசியில் தேய்பிறையில் சிறை அறையில் உதித்தாயே
நாலிரண்டு திதியினிலே ஆவணியில் பிறந்தாயே
உதிக்குமுன்னே உதரத்தில் உக்தி பல செய்தாயே
இதிஹாச பாலகனாய் இடம் மாறி வளர்ந்தாயே

அடைமழையில் காரிருளில் கரை புரளும் நதி நடுவே
அரவம் குடை பிடிக்க கூடை தனில் இருந்தாயே
பசுந்தளிராம் உன்னைத் தலைக் கூடையிலே கொண்டு சென்ற
வசுதேவனாம் தந்தை தன தலைவிதியை என் சொல்வேன்

சேயுனக்குப் பாலூட்டத தாயிருந்தாள் கோகுலத்தில்
சேயாக தேவகிக்கு யார் இருந்தார் கொடுஞ்சிறையில்?
அறிவாயோ கண்ணா நீ தேவகி தாப நிலை?
அடடா எத்தாய்க்கும் வேண்டா இது போன்ற துன்ப நிலை

மாமனைப் பயன்தெங்கும் ஓடவேண்டா மாணிக்கமே
சேயுனைத் தாங்குமினி என் மனமாகும் காப்பகமே
கண்ணா உன் நாடகத்தில் நானும் ஒரு பாத்திரமாய்
கலந்திடுவேன் உனைத் தேடி என் நெஞ்செங்கும் தோத்திரமாய்


7.உமையன்றி எமைக்காக்க

உமையன்றி எமைக்காக்க உலகினில் யார் உளர்,
உமை ஒரு பாகா தேவா, சிவசங்கரா (உமையன்றி)

கருணைக்கடல் நீயே அன்றோ...
காலவிடம் உண்ட கண்டன் அன்றோ...
கங்கை முடி கொண்டு, மங்கை இடம் கொண்டு,
அங்கை மழு கொண்டு நடமாடும் அய்யன் எனை ஆளும்
அம்மைஅப்பா... அம்மைஅப்பா... (உமையன்றி)

முப்புரம் எரித்த பரமன் அன்றோ...
முடியடி அறியா மாயன் அன்றோ...
கயிலை மலை மீது, மலையன் மகளோடு...
அய்யன் பண் பாடும் அடியார் தம் கலி தீர்த்து கரை சேர்க்கும்
கருணாகரா... கங்காதரா... (உமையன்றி)

In English alphabet:

umaiyandri emaikkakka

umaiyandRi yemaikaakka ulakinil yaar uLar
umai oru baaga devaa, sivasankaraa (umaiyandri)

karuNaikkadal neeye andRo...
kalavidam unda kandan andRo...
gangai mudi kondu, mangai idam kondu,
angai mazhu kondu nadamaadum ayyanenai aaLum
ammayappaa... ammayappaa... (umaiyandri)

muppuram eriththa paraman andRo...
mudiyadi aRiyaa maayan andRo...
kayilai malai meethu, malayan makaLodu...
ayyan paNpaadum adiyaar tham kali theerththu karai serkkum
karunakaraa... gangadhara... (umaiyandri)

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Sunday, November 8, 2009

6.காண்பதெல்லாம்

பல்லவி:
காண்பதெல்லாம் உந்தன் திருஉருவம் முருகா
கண்களுக்கினிய உன் ஆறு முகம் (காண்பதெல்லாம்...)

அனுபல்லவி:
கையில் வேலேந்தி கருணை விழி ஏந்தி
பயமில்லை நானிருக்க என்றே நீ வாராயோ (காண்பதெல்லாம்...)

சரணம் 1:
மயிலேறும் மைந்தா வா மலைமகள் குமரா வா
மயிலைவாழ் மாமன்னன் மகனே நீ வா வா வா
வள்ளிமணாளா வா வைகுந்தன் மருகனே வா
தேவயானியை மணந்த திருச்செந்தூர் முருகனே வா (காண்பதெல்லாம்...)

சரணம் 2:
ஆறுபடை வீடு கொண்ட அழகா முருகா வா
அன்பர்க்கு அடிமை கொண்ட பன்னிருகையனே வா
சூரனை சேவலாக்கி கொடியில் பதித்தவா வா
அரனுக்குபதேசம் அருளிய அய்யனே வா (காண்பதெல்லாம்...)

In English alphabet:

murugaa vaa

pallavi:
kaanpathellaam unthan thiru uruvam murugaa
kaNkaLukkiniya un aarumukam (kaanpathellaam...)

anupallavi:
kaiyyil velenthi karuNai vizhi enthi
bayamillai naanirukka endre nee vaaraayo (kaanpathellaam...)

charanam 1:
mayileRum maintha vaaa malaimakaL kumaraa vaa
mayilaivaazh maamannan makane nee vaa vaa vaa
vaLLimaNaaLa vaa vaikunthan marukane vaa
devayaniyai maNantha thiruchenthur murugane vaa (kaanpathellaam...)

charanam 2:
aaRupadai veedukoNda azhaka murukaa vaa
anparukku adimai koNda panniru kaiyyane vaa
sooranai sevalaakki kodiyil pathiththavaa vaa
aranukkupadesham aruLiya ayyane vaa (kaanpathellaam...)

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

5 சாமகானப்ப்ரியே

பாட்டு 1
பல்லவி:
சாமகானப்ரியே சாரதே
சரவணனின் அன்னை நீயே (சாமகானப்ரியே...)

அனுபல்லவி :
மாதருந்தன் நடையில் நின்று மனமுருகி பாடும்போது
மறைந்திருந்து மகிழ்ந்துறையும் காட்சி தனை மனதில் கண்டேன் (சாமகானப்ரியே...)

சரணம் 1:
அம்மா நீ அவதரித்து அசுரர்களை அழித்தொழித்த
நவராத்ரி மகிமைகளை நலமுறவே துதித்திடுவோம்
மாதவனின் சோதரியே மதுரைவாழும் மாதரசே
சுடலையாடும் நாயகனின் காதலியே கற்பகமே (சாமகானப்ரியே...)
சரணம் 2:
மலைமகள் நீ கண்திறந்தால் மாநிலமே தழைக்குதம்மா
மறைபோற்றும் நாயகியே குறை அகற்றும் குணவதியே
கருணையுள்ளம் கொன்டவளே கல்யாணி திரிசூலி
காட்சி தந்து ஆட்சி செய்வாய் புன்னக்கல் பகவதி நீ (சாமகானப்ரியே...)

பாட்டு 2.
பல்லவி:
சாமகானப்ரியே சாரதே

சரவணனின் அன்னை நீயே (சாமகானப்ரியே...)

அனுபல்லவி :
மங்களங்கள் பொங்கிடவே மனமுருகி பாடிநின்றோம்
குங்குமாங்கி மாதங்கி அகமகிழ்ந்தருள்வாய் நீ (சாமகானப்ரியே...)
சரணம் 1.
மங்கொம்பு பகவதி தன் பதமலரிணை பணிந்திடுவோம்
பண்பாடி தொழுதிடுவோம் கண் திறந்து காத்திடுவாள்
மாதவனின் சோதரியே மதுரைவாழும் மாதரசே
சுடலையாடும் நாயகனின் காதலியே கற்பகமே (சாமகானப்ரியே...)
சரணம் 2:
மலைமகளே மங்கொம்பில் திருக்கோயில் கொண்டவளே 
வட்டகவாளுடையவளே வரமருளும் வனதுர்க்கே
கருணையுள்ளம் கொன்டவளே கல்யாணி திரிசூலி
காட்சி தந்து ஆட்சி செய்வாய் கரம் கூப்பி தொழுதிட்டோம்  (சாமகானப்ரியே...)



All rights reserved for the poem. Leela Narayanaswamy©

4. கண்கள் காணும் காட்சி எல்லாம் கண்ணனைக் கண்டேன்

கண்கள் காணும் காட்சி எல்லாம் கண்ணனைக் கண்டேன்
கருநீல வண்ணன் அவன் திருமுகம் கண்டேன்
குழலூதும் பாலன் குழலில் மயிலிலை கண்டேன்
அழகு மகள் ராதை அவன் நெஞ்சினில் கண்டேன்

அரவின்மேல் ஆடும் அவன் எழிலுருக் கண்டேன்
ஆடை தந்து மானம் காத்த அருளினைக் கண்டேன்
ஓர் குடையில் ஊர காத்த உயர்வினைக் கண்டேன்
தேரோட்டும் சாரதியாம் அரங்கனை கண்டேன்

மண்ணுண்ட மாயனவன் மாளிகை கண்டேன்
விண்ணோர்கள் ஏத்துமவன் இணையடி கண்டேன்
அவலுண்டு பிணிதீர்த்த அன்பினைக் கண்டேன்
தவ வாழ்வின் முடிவினை நான் தஞ்சமெனக் கொண்டேன்

In English alphabet:

kaNNanai kaNden

kaNkaL kaaNum kaatchi ellaam kaNNanai kaNden
karuneela vaNNan avan thirumukham kaNden
kuzhaloothum baalan kuzhalil mayililai kaNden
azhaku makaL raadhai avan nenjinil kaNden

aravinmel aadum avan ezhiluru kaNden
aadai thanthu maanam kaaththa aruLinai kaNden
Or kudayil uur kaaththa uyarvinai kaNden
theerottum saarathiyaam aranganai kaNden

maNNuNda maayanavan maaLikai kaNden
viNNorkaL eththumavan iNayadi kaNden
avaluNdu piNi theerththa anpinai kaNden
thava vaazhvin mudivinai naan thanjamena koNden

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Sunday, October 11, 2009

5. ஆழ்கடலின் நீள்பரப்பை

ஆழ்கடலின் நீள்பரப்பை யார் அறிவாரோ?
அலை ஓய்ந்த கடலதனை யார் கன்டாரோ?
பாயும் அலைஓசை இசை யார் அறிவாரோ?
பாடும் அதன் மொழி எதுவோ யார் அறிவாரோ?
கரை கடக்கும் கடலலைகள் இரைதெடி அலைகிறதோ...
பதறும் அதன் நிலைகண்டு சிதறி விழும் கரைகள் இதோ...
சீற்றமோ ஏமாற்றமோ கடலின் மனம் யார் அறிவார்?
மாற்றமில்லாதாடும் அலை கூற்று கேட்க யார் வருவார்?

In English alphabet:

kadal alai

aazhkadalin niiLparappai yaar aRivaaro?
alai ooyntha kadalathanai yaar kandaaro?
paayum alaioosai isai yaar aRivaaro?
paadum athan mozhi ethuvo yaar aRivaaro?
karai kadakkum kadalalaikaL iraithedi alaikiRatho...
pathaRum athan nilaikaNdu chithaRi vizhum karaikaL itho...
chiitRamoo eemaatRamoo kadalin manam yaar aRivaar?
maatRamillaathaadum alai kuutRu keetka yaar varuvaar?

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Monday, September 28, 2009

3.ஓம் எனும் ப்ரணவ

ஒம் எனும் ப்ரணவ சொல்லின் உட்பொருளே...
உமையவள் நேசனே எமை ஆளும் நாதனே...
மதுரத்தமிழ் வாழ் மதுரையில் சுந்தரனே...
சதுராடும் கோலம் கொண்ட சிதம்பரநாதனே...
இடையில் புலித்தோலும் ஜடையில் சந்திரனும்...
கடைக்கண்ணில் தண்ணொளியும் படைபயக்கும் நுதல்க்கண்ணும்...
இடக்கையில் உடுக்கையும் வலக்கையில் அபயமும்...
இடையறா புன்சிரி வீசும் இன்முகமும்...
நாளும் என் மனதில் சிற்பமாய் நின்றிடவே...
நாவில் நால்வரின் பாசுரம் ஊறிடவே...
வேண்டினேன் வேறொன்றும் வேண்டிலேன் சிவனே...
வேதமாம் சாமத்தின் நாயக நடராஜனே...

In English alphabet:

Omkaara naadane


Om enum praNava chollin utporuLe...
umayavaL neshane emai aaLum naathane...
mathurathamizh vaazh mathuraiyil sundarane...
chathuraadum kolam konda chithambara naathane...
idayil puliththolum jadayil chandiranum...
kadaikkaNNil thaNNoLiyum padai payakkum muthalkkaNNum...
idakkaiyyil udukkaiyum valakkaiyyil apayamum...
idaiyaRaa punchiri veeshum inmukamum...
naaLum enmanathil chiRppamaay nindridave...
veNdineen veRondRum veNdileen shivane...
vedamaam saamaththin naayaka natarajane...

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Tuesday, September 1, 2009

4.மழலையின் முதல் வார்த்தை

மழலையின் முதல் வார்த்தை அம்மா ஆகும்,
மதுரமூறும் தமிழ்ச்சொல்லும் அதுவே ஆகும்.
பிறக்குமுன்பும் பிறந்த பின்பும் நம்மை பேணும்,
உறக்கும் நம்மை உறங்காது காக்கும் நாளும்.
தாங்காய் தணலாய் பாங்காய் பணி புரியும்,
தாழ்வரையில் என்றுமோர் சாய்வு நாற்காலி ஆகும்.
சேயாக பிறப்பதுன்டு நாம் தாயாக பிறப்பதில்லை,
தாயாகும் யாரும் அம்மா ஆவதுமில்லை.
வானோரும் போற்றும் அம்மா என்ற நிலை,
தானே வராது, இது ஓர் அதிசய உயர்நிலை.
அன்பும் பாசமும் அணைக்கும் கரங்களும்,
புண் ஆற்றும் சொற்களும், புன்சிரி முகமும் - பிறரை
சேயெனக் காணும் பொன்மனப் பக்குவமும்,
தாயாக உருவெடுக்கும் தனித்தமிழ் சொல்லினிலே.

In English alphabet-



manithappiRaviyin manthiram

mazhalaiyin muthal vaarththai ammaa aakum,
mathuramuuRum thamizhchchollum athuvE aakum.
piRakkumunpum piRantha pinpum nammai pENum,
uRakkum nammai uRangkaathu kaakkum naaLum.
thaangkaay thaNalaay paangkaay paNi puriyum,
thaazhvaraiyil enRumoor saayvu naaRkaali aakum.
sEyaaka piRappathundu naam thaayaaka piRappathillai,
thaayaakum yaarum ammaa aavathumillai.
vaanoorum pootRum ammaa enRa nilai,
thaanE varaathu, ithu oor athisaya uyarnilai.
anpum paasamum aNaikkum karangkaLum,
puN aaRRum choRkaLum, punchiri mukamum - piRarai
sEyena kaaNum ponmana pakkuvamum,
thaayaaka uruvedukkum thaniththamizh chollinilE.

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

3. மழலையும் மலர்களும்

மழலையும் மலர்களும் ஒன்றென்பார் சிலர்,
மனதினில் மகிழ்வலை எழுப்புவதாலே.
மழலை பிறக்குது அழுகுரலுடனே,
மலர் இங்கு பூக்குது சிரிமுகத்துடனே.
மலரும் பூக்களுக்கேன் இத்தனை மகிழ்ச்சி,
புலரும் வேளையை புணர்ந்ததினாலோ?
கண் திறக்கும் போதே குழவி ஏன் அழுததோ,
மண்ணில் பின்னிடும் துயரம் அறிந்ததோ?
மழலையின் தலைவிதி பிறந்திடும் முன்பே,
மலர்களின் தலைவிதி மலர்ந்த பின்பே.
மாதரின் முடியிலோ, மண்ணின் மடியிலோ,
மந்திர ஓசையுடன் தெய்வத்திருவடியிலோ?
அறியாவிடினும் சிரிக்கும் பூமுகங்கள்,
சில மணித்துளிகளே வாழும் இம்மலர்கள்.
மாறுபட்ட மணநிற மலர்களுக்கொரே குணம்-
மணம்பரப்பி மனிதரிடை மகிழ்வு தரும் இன்முகம்.
மாறுபட்ட குணங்களிங்கு மனிதர்க்கு மாத்திரம்-
மனம்கறுத்து முகம் சுளிக்கும் மாந்தரிங்கு பலவிதம்.
இன்முகத்துடனே இல்லறம் வளர்த்திட,
இன்னல்களிலும் முகம் மலர்போல் மலர்ந்திட,
மகிழ்ச்சி ஒன்றே அருமருந்தாகும்,
மனதெனும் பேயின் வன்முறை அடக்கும்.
ஆகையால் மனிதா!
இன்றையப்பொழுதினில் சிரித்து வாழ்வாய்,
இனிவரும் காலம் இறைவன் கைகளில்!


In English alphabet:

malarum manithanum


mazhalaiyum malarkaLum onRenpaar chilar,
manathinil makizhvalai ezhuppuvathaalE.
mazhalai piRakkuthu azhukuraludanE,
malar ingku puukkuthu chirimukaththudanE.
malarum puukkaLukkEn iththanai makizhchchi,
pularum vELaiyai puNarnthathinaaloo?
kaN thiRakkum poothE kuzhavi yEn azhuthathoo,
maNNil pinnidum thuyaram aRinthathoo?
manithanin thalaividhi piRanthidum munpE,
malarkaLin thalaividhi malarntha pinpE.
maatharin mudiyiloo, maNNin madiyiloo,
manthira ooshaiyudan theyvaththiruvadiyiloo?
aRiyaavidinum chirikkum puumukangkaL,
chila maNiththuLikaLE vaazhum immalarkaL.
maaRupatta maNaniRa malarkaLukkorE kuNam-
maNamparappi manitharidai makizhvu tharum inmukam.
maaRupatta guNangkaLingku manitharkku maaththiram-
manamkaRuththu mukam chuLikkum maantharingku palavitham.
inmukaththudanE illaRam vaLarththida,
innalkaLilum mukam malarpool malarnthida,
makizhchchi onRE arumarunththaakum,
manathenum pEyin vanmuRai adakkum.
aakaiyaal manithaa!
inRaiyappozhuthinil chiriththu vaazhvaay,
inivarum kaalam iRaivan kaikaLil!
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Thursday, July 30, 2009

2. காற்றின் வாய்ப்பட்ட இலை

காற்றின் வாய்ப்பட்ட இலை
நாற் புறமும் அலைவது போல்,
நோக்கமில்லா மனிதரது
வாழ்க்கையும் அலைந்தழியும்.

புழுவிற்கும் நோக்கமுண்டு,
உழவர்க்கு உதவலுண்டு,
நிழல் தரும் மரங்களுக்கும்
பழம் தரும் எண்ணமுண்டு.

நாய்க்காவல் புரிவதுன்டு,
பாய்ந்து செல்ல பரிகளுன்டு,
பால் தந்து உதவ இங்கே
பசுக்களைப்போல் யாவருன்டு?

மணம் பரப்பி மனந்தன்னை
மலர்விக்கும் மலர்களுண்டு,
கணநேரம் வாழ்ந்திடினும்
பனித்துளியால் பயனுண்டு.

பலர் வாழத் தன்வாழ்வைச்
சிலநேரம் கழித்திருக்கும்,
நல்நோக்கம் உள்ளோர்தம்
இல்லத்தில் இன்பமுண்டு!

In English alphabet:

piRappin payan


kaattrin vaayppatta ilai
naaR puRamum alaivathu pOl,
nOkkamillaa manitharathu
vaazhkkaiyum alainthazhiyum.

puzhuviRkum nOkkamuNdu,
uzhavarkku uthavaluNdu,
nizhal tharum marangkaLukkum
pazham tharum eNNamuNdu.

naaykkaaval purivathundu,
paaynthu sella parikaLundu,
paal thanthu uthava ingkE
pasukkaLaippOl yaavarundu?

maNam parappi mananthannai
malarvikkum malarkaLuNdu,
kaNa nEram vaazhnthidinum
paniththuLiyaal payanuNdu.

palar vaazha thanvaazhvai
chilaneeram kazhiththirukkum,
nalnookkam uLLoortham
illaththil inbamuNdu!

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

This poem was composed in 1973.

Monday, July 27, 2009

2.ஒரே மனதாய்

ஒரே மனதாய் உனை அழைத்தேன்,
உள்ளம் முழுதும் உன்னை நினைத்தேன்... (ஒரே)

தில்லை ஆடும் தேவன் தேவி,
செந்தூர் முருகன் அன்புத் தாய் நீ...
மயிலை வாழும் மாயே தாயே,
மயங்கும் என்னைக் காப்பாய் நீயே. (ஒரே)

உள்ளம் உருகி, ஊனும் உருகி,
கண்ணீர் பெருக்கி, கைகள் கூப்பி,
உன் தாள் பணிந்தேன் உமையே சிவையே,
மண்ணில் உய்ந்தேன் மலையன் சேயே. (ஒரே)

In English alphabet:

ThayE! Unnai NinaiththEn


Orey manathaay unai azhaiththEn,
ULLam muzhuthum unnai ninaiththEn...

Thillai aadum devan devi,
Chenthuur murukan anpuththaay nii...
Mayilai vaazhum maayee thaayE,
Mayangum ennai kaappaay niiyE.

ULLam uruki uunum uruki,
kaNNiir perukki kaikaL kooppi,
Un thaaL paNinthEn umaiyE shivaiyE
MaNNil uyntheen malayan sEyE.
All rights reserved for the poem. Leela Narayanaswamy©

This poem was composed in 1973.

Thursday, July 23, 2009

1.வெள்ளை நிறம்

வெள்ளை நிறம் வெறுத்ததென்று
நீல நிறம் தழுகினயோ?
சொல்லிடுவின் மேகங்களே
மெல்ல என் செவியினிலே
நீல நிற கார் மேகமே நீ
நிலம் தொட்டு தழுவிடவே
மழை நீரை தூதனுப்பி அவள்
மனம் அறிய நினைத்தாயோ?
ஊடி நின்ற மண்ணை நீ
நீர் கொண்டு களிப்பித்தாயோ?
உன்னைக் கண் குளிர கண்டிடவெ
மின்னலில் மிளிர்ந்திட்டாயோ?
அதிரும் இடியோசையுடன் நீ
இறங்கி வந்த வேகம் கண்டு
நிலம் அங்கு நடுங்கி கணம்
தலம் நீருக்குள் ஒளிந்ததுவோ?

In English alphabet:

MEkhangal


VeLLai niram veruththathendru
Neela niram thazhukinayO?
Cholliduvin meghangale
Mella en cheviyinile
Neela nira kaar meghame nee
Nilam thottu thazhukidave
Mazhai neerai doothanuppi avaL
Manam ariya ninaiththaayo?
Uudi nindra maNNai nee
Neer kondu kaLippiththayo?
Unnai kaNN kulira kandidave
Minnalil miLirnthittayo?
Athirum idiyosayudan nee
Irangi vantha vegam kaNdu
Nilam angu nadungi kaNam
Thalam neerukkuL oLinthathuvo?

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

Wednesday, July 22, 2009

1.ஆனை முகத்தோனே,

A prayer to Lord Vigneshwara to begin with.

ஆனை முகத்தோனே ஆறு முகன் சோதரனே,
அன்னை உமையவளின் அருமை மகனே...
அன்னைக்கு காவலாகி தந்தையிடம் போராடி தன்-
நம்பிக்கை காத்ததனால் தும்பிக்கை பெற்றவனே...


முன் வினை தீர்ப்பவனே முழுமுதற் கடவுளே தன்
தாய் தந்தை தரணி என்றே வலம் வந்துணர்த்தியோனே...
உந்திய வயிற்றோனே உனதடி பணிந்தேனே,
எந்தையும் தாயுமாயென் குறை களைந்தருள் நீயே!

காகமாய் உருவெடுத்தே கமண்டலம் கவிழ்த்தோனே,
ஏக்தந்தனே உன்னை ஏத்தமிட்டு தொழுதோமே...
எருக்கம்பூ அருகம்புல் என்றிவையில் மகிழ்வோனே,
எதிருமிடர் தொலைந்திடவே என்றும் முன்னில் வருவாயே!

All rights reserved for the poem. Leela Narayanaswamy©

I have tuned it in Kaanada ragam.

I have been composing poems from my youth. This is one of my later poems (dated 04-June-2005). I would never have known the infinite possibility of weblogging in the internet if it were not for my son Ramesh. He helped me understand this possibility but it took a final shape today. The credit for this goes to my daughter Rekha, and her friend Rahul (who is as good as my second son).